Header Ads



கீதா அவுட் - உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை, சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்கும் கீதா குமாரசிங்க சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என்று, சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம், தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் முடிவிலேயே, கீதா குமாரசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதிப்படுததியுள்ளது.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா குமாரசிங்க இழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.