Header Ads



கருத்துக்களை வெளியிடாது, அமைதியாக இருப்பது பொருத்தமானது

தேசிய அரசாங்கத்தை உருவாக்கியதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாத நல்லாட்சி அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஆங்காங்கே கருத்துக்களை வெளியிடாது அமைதியாக இருப்பது பொருத்தமானது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சியினால் செய்ய முடியாதவைகளை நிறைவேற்றவே தேசிய நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பிரதிநிதிகளுக்கு அந்த பொறுப்பு இதுவரை புரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடையவில்லை. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அன்றைய தலைவருக்கும், செயலாளருக்கும் இடையில் போட்டி நிலவியது.

தலைவர் தோற்றுப் போனார், செயலாளர் வெற்றி பெற்றார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது. கட்சியின் முன்னாள் தலைவர் தோல்வியடைந்தார் என்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தக் கூடாது.

கட்சியை பொறுப்பேற்ற நாளில் இருந்து கட்சியை ஐக்கியப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகிறார். அனைவரும் கட்சியுடன் இணைய வேண்டும் என்றே அவர் கோரிக்கை விடுத்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Your always paksha paksha.
    NOT PAKSHA THINK AND WORK FOR COUNTRY.WE NEED COUNTRY AND DEVELOPMENT THEREFOR PAKSHA

    ReplyDelete
  2. My3 has realised that your jokers (duminda, faizer etc) are not sufficient to develop the SLFP and therefore, he will be surrendered to Mahinda very soon.

    ReplyDelete
  3. இவர் கூறுவது போன்று நல்லாட்சியை ஏற்படுத்தியது இவர்கள் ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்த ஊழல் பேர்வழிகளை காப்பாற்றுவது...

    ReplyDelete

Powered by Blogger.