Header Ads



வடகிழக்கு இணையாவிட்டால், முஸ்லிம்களே பாதிப்படைவர் - பிரசன்னா

வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போகும் நிலையேற்படும். இதனால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே 

இவ்வாறானதோர் நிலைக்கு  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே காராணமாக அமைவார் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா  வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடரந்து பதிலளிக்கையில்,

வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறிய அவர், அந்த ஆறு எந்த இடத்தில் இருந்து ஊற்றெடுக்கும், அது எங்கு சென்றடையும், அந்த ஆற்றினால் பயனடைவோர் யார் போன்றவற்றையும்  கூறவேண்டும். இதனை சரியாக கூற அவருக்கு தெரியாது காரணம் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியல்ல அவர் மக்களால் நிராகரிக்கபட்டவர்.

அவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்பட்டவராக இருந்திருந்தால் தற்போதைய அரசியல் நிலையினை கருத்தில் கொண்டு பொறுப்புவாய்ந்த கருத்துக்களை வெளியிட்டிருப்பார். அமைச்சர் அவர்களே நீங்கள் மஹிந்த ஆட்சி காலத்தில் நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் இடங்கள் பலவற்றில் இரத்த ஆறு ஓடியபோது அதற்கு வாய்க்கால் வெட்டிகொடுத்தவரல்லவா? அவ்வாறானோதோர் ஆட்சியாளர் இலங்கைக்கு மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை திரட்டியவர் நீங்களல்லவா.? ஆனால் மக்களோ உங்களை கருத்திலேடுக்காது தற்போதைய ஜனாதிபதிக்கே  வாக்களித்தனர். இதிலிருந்து நீங்கள் பாடம் கற்கவில்லையா? இவ்வாறு சுயநல அரசியல் செய்யும் நீங்கள் தற்போது திடிரென்று இவ்வாறான கருத்தினை வெளியிடுவதன் நோக்கம் என்ன.?  

தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக இருந்து வருகின்ற உறவினை கேள்விக் கூறியாக்குவதாகவே இக்கருத்து அமைந்துள்ளது. உதாரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியான உறவில் இரண்டு இனமும் பின்னி பிணைந்து  பலதரப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உறவு பலநெடுங்காலமாக இருந்துவருகின்றது. இதன் காரணமாகவே தற்போது பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளீர்கள். இதனைமறைக்க ஆனால்  நீங்கள் எங்களுடன் இணைந்து வாழ விரும்பாவிட்டால் நாங்கள் எவ்வாறு பின்னி பிணைந்து வாழ முடியும்? பிரிவினை எங்கிருந்து வருகின்றது இதனை உருவாக்குவது யார்? இதன் விளைவுகள் என்ன? போன்றவற்றை எதிர்காலத்தில் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையில் அமைச்சர் இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

8 comments:

  1. கிழக்குடன் வடக்கு இணையக்கூடாது என்பது ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கருத்து மட்டுமல்ல அது இலங்கைவாழ் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்தாகும் .தற்போது கிழக்கு வடக்கு மக்கள் ஓரளவு மகிழ்ச்சியாக இருப்பதட்கு காரணம் கிழக்கும் வடக்கும் பிரிந்து இருப்பதேயாகும் .கிழக்கு முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் அச்சுறுத்தல்களை ஏட்படுத்தி அதன்மூலம் கிழக்கையும் வடக்கையும் இணைத்துக்கொள்ளும் முயட்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன .இது ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை .தற்போது இருப்பது போல் கிழக்கும் வடக்கும் இருந்தால் சமாதானமாக வாழ முடியாதா ?

    ReplyDelete
  2. No NE merge.

    It is only a dead horse.

    ReplyDelete
  3. பக்கத்து ஊர் சண்டியன் மாமாவின் (இந்தியா) உதவியுடன் திருட்டு தனமாக பெண்ணின் (கிழக்கின்) சம்மதமில்லாமல் மனைவியாக்கி கொடுமைகள் பல செய்து நன்றாக அனுபவித்து ருசி கண்டு விட்டு, ஜாதியின் பெயரால் அடிமைத்தனமும் செய்து விட்டு இப்போது இது முறையற்ற இணைப்பு என்று இலங்கை நீதித்துறை விவாகரத்து வழங்கியதால் அவள் (கிழக்கு) நிம்மதியாக வாழ்கிறாள். மீண்டும் அவள் வாழ்கையை நீங்கள் கெடுக்க தேவையில்லை. அனுபவித்தது போதும். நீங்கள் விட்டுச் சென்ற கறைகள் இன்னும் நீங்கவில்லை, அவள் வலிகள் இன்னும் மாறவில்லை.

    மீண்டும் அவள் வேண்டுமென்றால் மிரட்டும் தொனியையும், அவள் குடும்ப தலைவர்களுக்கு (கிழக்கு அரசியல் வாதிகளுக்கு) பதவி ஆசை காட்டுவதையும் விட்டு விட்டு அவள் மனம் கவரப் பாருங்கள். அதுவரை அவள் மனமுவந்து உங்களிடம் வரமாட்டாள். ஆனால் துரதிஷ்டம் அவளை கவர உங்களிடம் வசீகரம் இதுவரை இல்லை.

    ReplyDelete
  4. நாங்கள் படித்தபாடம் உங்களிடமிருந்துதான், எத்தனை பள்ளிவாயல்கள், வீடுகள், வயல்களில் எங்கள் இரத்தங்கள் ஓட்டப்பட்டன. இதெல்லாம் பட்டும் நாங்கள் உணரமாட்டோமென நினைப்பது உங்கள் முட்டாள்தனம். வியாபாரம்செய் விடமாட்டோமென மிரட்டுறீரா? புலிகள் பலமோங்கியிருந்தபோதும் உயிரை ஒருகையில்வைத்து மறுகையால் வியாபாரம் செய்தோம். அப்பவே உம்மால் எம்மை புடுங்க முடியவில்லை. ஹிஸ்புல்லாஹ் சேர் எதிரணியில் நிண்றது எமக்கு ஒரு கவசமே. ஒருவேளை நிலமை மாறியிருந்தால் எம்மை காக்கும் ஒரு பெரும் வழியாக அவரே இருந்திருப்பார். இண்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடாத இலக்குகளைகூட அவர் நிறைவுசெய்துவிட்டார். நீங்கள் பேசுவதுபோல் அனைவரும் உத்தமர்களென்றால் ஏன் விக்கி ஊழலுக்கெதிராக எடுத்த முடிவில் சரி பிழைஎன இரு குழுவானீர்கள்???

    ReplyDelete
  5. If NOT support the joining of EAST and NORTH.. You will Harm the economy.

    IF YES support the Joining of EAST and NORTH.. You will chaste Muslims out of their land using your majority power,, as you have proved in the past by chasting out Jaffna Muslims.

    Do not waste you time in trying to make Muslim FEAR you.. WE Muslim may face poverty, and die BUT we only fear Yours and Ours ONE TRUE GOD (Allah).

    ReplyDelete
  6. Tamils and Muslims can peacefully live only when NE is separated.

    ReplyDelete
  7. ஐயா பிரசன்னா.
    நல்லா கத உர்ரயா. எந்த சர்வகலாசாலையில படிச்சய நீ. உன்ன வடக்கத்தியான் படலைக்குள்ளே எடுக்கமாட்டான். நீ என்ன சாதியோ என்ன எளவோ என்டு தூரத்துலதான் நிக்கவைப்பான். அதுக்குள்ள எணச்சிப்போட்டு எங்கபோய் நிக்கப்போறயா?
    மகிந்த மாமாட்ட போனா உம்முடைய யோசனைக்கு (ஜோதிடம்) ஏதாவது போட்டு குடுப்பார்.

    ReplyDelete
  8. வட, கிழக்கு இணையாவிட்டால் முஸ்லிம்களே பாதிப்படைவார்கள் - மிஸ்டர் பிரசன்னா சொல்கிறார்.

    அப்போ, வட, கிழக்கு இணையாவிட்டால் தமிழர்கள் நன்மையடைவார்கள்போல.

    ReplyDelete

Powered by Blogger.