Header Ads



மோசமான பழக்கங்களுக்கு அடிமையாகாமல், பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது


கடந்த அரசாங்கம் மத்திய கொழும்பில் வாழ்ந்துக்கொண்டிருந்த மக்களை தமது இருப்பிடங்களிலிருந்து அகற்றி கொழும்பிற்கு வெளிவே விரட்டுவதற்கு முயற்சி செய்தது.

கடந்த அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிராக போராடி வழக்கு தொடா;ந்து மக்களின் போராட்டத்தை நாம் வெற்றியடையச் செய்தோம். கடந்த அரசாங்கத்தின் இந்த அநீதிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு சுமார் ஆறு இலட்சம் ரூபாய்களை நாம் செலவிட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான்     கூறினார்.

நேற்று கொழும்பு, மாளிகாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலுக்கிணங்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொழும்பு நகரின் அடிப்படை வசதிகள் குறைவான நகர குடியிருப்புகளை நவீன நகரமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாடி வீட்டுத் திட்டத்தில் 480 வீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வீட்டுத் திட்டத்தை திறந்து வைத்தார்.  அமைச்சா;களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, பைஸர், முஸ்தபா, சரத் பொன்சேக்கா,  ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் உரையாற்றிய முஜீபுர் றஹ்மான் மேலும் தெரிவித்ததாவது,

அடிப்படை வசதிகள் அற்று வாழ்ந்த  உங்களுக்கு இன்று சிறந்த முறையில் வாழ்வதற்கான ஒரு சூழலை எமது நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சந்தா;ப்பத்தை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையின் தரத்தை உயா;த்திக்கொள்ளுங்கள். இந்த சூழலை ஒழுங்காக பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

போதை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளால் இந்த சூழல் மாசு படாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மோசமான பழக்கங்களுக்கு இந்த நல்ல சூழல் அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

மத்திய கொழும்பிலுள்ள ஏனைய குறைந்த வருமானம் பெறும் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளையூம் மாற்றி இத்தகைய மாடிவீட்டுத் திட்டங்களை உருவாக்க்க உள்ளோம். இந்த நல்லாட்சியின்  கீழ் மீண்டும் ஒரு பிரேமதாஸ யுகத்தை நாம் கட்டியெழுப்புவோம் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.