Header Ads



சைக்­கிளில் வரக் கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை, நிலைமை மோச­ம­டைந்து விட்­டது – மஹிந்த

நாடா­ளு­மன்­றத்­திற்குள் சைக்­கிளில் வரு­வ­தற்கு கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை. நிலைமை மோச­ம­டைந்து விட்­டது என முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­க்ஷ குற்றம் சாட்­டி­யுள்ளார்.

நாடா­ளு­மன்­றத்­துக்கு சைக்­கிளில் வருகை தந்­தமை தொடர்பில் நாடாளுமன்ற வளா­கத்தில் வைத்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அவர் மேலும் தெரி­விக்­கையில், 

நாங்கள் பொது­மக்­களின் அவ­லத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் சைக்­கிளில் நாடா­ளு­மன்­ற­திற்கு வருகை தந்தோம். அதற்குக் கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை. நிலை­மைகள் மிகவும் மோச­ம­டைந்து விட்­டன என்றார்.

இதே­வேளை நாமல் ராஜ­பக்க்ஷ எம்.பி. தெரி­விக்­கையில், அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க துறை­முக அமைச்­ச­ராக இருந்த போது துறை­மு­கங்­களை விற்­பனை செய்­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்டார். அதனால் அந்த அமைச்­சி­லி­ருந்து அவரை மாற்றம் செய்­தார்கள்.

தற்­போது தரம் குறைந்த பெற்­றோலை இறக்­கு­மதி செய்­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்டார். இதனால் பெற்றோல் தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்தி அவ­ருக்கு நெருக்­கடி அளிக்­கின்றார்கள்.

பொது­மக்கள் பெற்றோல் இன்றி நெருக்­க­டிக்குள் உள்­ளா­கி­யுள்­ளனர். அவர்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வை வழங்­கு­வ­தற்கு திரா­ணி­யற்ற நிலையில் பெற்றோல் தாங்­கிய கப்பல் வரு­கின்­ற­மையை மணித்தியாலத்துக்கு ஒரு தடவை செய்தியாக வெளியிடுகின்ற நிலைமைக்கு அரசாங்கம் தரம் குறைந்து சென்றுள்ளது என்றார்.


No comments

Powered by Blogger.