Header Ads



தமிழ் இனவாதம் வலிமைப்பெற்றால், சிங்கள இனவாதம் வலுப்பெறும் - அநுராவின் அற்புதமான பேச்சு


ஒரு தீக்குச்சியினால் பாரிய தீ உருவாவது போல், இலங்கையில் இனவாத மனோநிலை உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய -18- நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

இந்தநிலைக்கு அரசியல் வாதிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கொடியை ஏற்றுவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடா? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்கு கூறவேண்டும்.

இலங்கையின் தேசிய கொடி தொடர்பில் பல்வேறு தர்க்க ரீதியான விவாதங்கள் இருக்கலாம்.

எனினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவது கட்டாயமானது.

வடக்கு மாகாண அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை புறக்கணித்தமை வெளிப்படையாக இனவாதத்தை சுட்டி நிற்கின்றது.

இந்த இனவாதம் வடக்கில் இருந்து உருவாகின்றதா..? அல்லது தெற்கில் இருந்து உருவாகின்றதா என்பது அவசியமானதல்ல.

இனவாதம் என்பது மேலும் இனவாத்தை போசிப்பதாகவே அமைகின்றது.

தமிழ் இனவாதம் வலிமைப்பெறுகின்ற போது, அதற்கு எதிராக சிங்கள இனவாதமும் வலிமைப்பெறும்.

எனவே தேசிய நல்லிணக்கத்தின் மூலமே இனவாத்தை தோற்கடிக்க முடியும்.

அத்துடன் இனவாதத்தை தோற்கடிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இனவாதத்தை வலியுறுத்தி அரசியல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நாடு பிளவுப்படுவதாக கூறி பொய்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கிலும் இனவாதத்தை வலியுறுத்தும் தரப்புக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் செயல்பட்டு வருவதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

7 comments:

  1. தமிழ் இனவாதிகளும், அரசியல்வாதிகளும் இந்த நாட்டின் சாபக்கேடுகள்

    ReplyDelete
  2. மனிதனுக்குள் ஒரு வாதம் எப்போதும் இருக்கும்.

    இலங்கை ஒரு தீவாக இருப்பதால் இங்கு சாதிவாதம், இனவாதம் மற்றும் மொழிவாதம்...

    அஃதல்லாத போது அதுவே நிறவாதம், பொருளாதார வகுப்புவாதம்... இப்படி.

    அனால், அனைத்திலும் சிறந்தது சர்வதேசியவாதம்.

    அதனை அடைவதற்கான வழி ஏகத்துவவாதம்.

    ஒரே இறைவன், அவன் படைத்த மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பம்.

    குடும்பம்-உறவினர்கள்-தூரத்து உறவினர்கள் உலகினர் அனைவரும்.  ஆம், அதுதான் உண்மையும் அதற்கான விளக்கமும்.

    ஒரே வானம், ஒரே பூமி, ஒரே ஆட்சி ஒரே நீதி.

    இமாம் மஹ்தி (அலை) அவர்களும் இமாம் ஈஸா (அலை) அவர்களும் வந்து சர்வதேச அளவில் செய்யவிருக்கும் அமைதிக்கான பணி அது.

    இச்சிறு தீவில், உலகுக்கே முன்னுதாரணமாக இதனைச் செய்து காட்டி, நம் மக்களுக்கு அமைதியான வாழ்வொன்றை அளிக்க, தற்போதைக்கு இதற்கு நெருக்கமாக இருக்கும் JVP இதனைக் கற்க வேண்டிய காலம் கணிந்துள்ளது.

    நாடளாவிய ரீதியில் அதற்கான ஆதரவை அது இயல்பாகவே கொண்டும் உள்ளது.

    ReplyDelete
  3. இப்படிப்பட்டவர்கள் எதிர்பார்ப்பது இந்நாட்டில் தொடர்ந்து இனவாதம் இருக்கவேண்டும் என்று. அப்போது தான் இந்த கயவர்களால் அரசியல் செய்ய முடியும்... இந்நாட்டின் தேசிய கொடியை ஏற்ற மறுத்த இந்த இனவாதியின் குடியுரிமை உடனடியாக பரிக்கப்படவேண்டும்.. அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நாடு தொடர்ந்து அழிவை நோக்கி செல்லும்...

    ReplyDelete
  4. வடக்கு என்றாலே இனவாதம்தான், அதுக்குள்ள என்ன வடக்கில் இனவாதம் வேண்டிக்கிடக்கு???

    ReplyDelete
    Replies
    1. வடக்குக்கு முஸ்லிம்கள் வரும்போது இனவாதமும் சேர்ந்து வருகின்றது. அது ஏன் Abdul சார்?

      Delete
  5. இந்த தமிழ் பயங்கரவாதியின் குடியுரிமை பறிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  6. This happened to tamil people in 1948 ,1956,1972,1977 and this is happening 1983 and 2009 No leaders talk about this Sinhalese terror against minority's.No days Muslim brothers affected badly.As minister said this never happened during the war time...Why NOW?

    ReplyDelete

Powered by Blogger.