Header Ads



அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம்



ஈரான் ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

பயங்கர நிலநடுக்கத்தால் ஈராபில், தூகூக், அல்பஜ்ஜா ஆகிய இடங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான தாக கூறப்படுகிறது. அங்கு இருந்த மக்கள் ஏற்கனவே வன்முறையால் கட்டிடங்கள் காலி செய்து விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. அதன் எதிரொலி குவைத் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டது. பல கட்டடங்கள் குலுங்கின. நள்ளிரவு வரை பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். உயிர்ச்சேதங்களோ, வேறு விதமான ஆபத்துகளோ ஏற்படவில்லை.

    இருப்பினும் பல இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். குவைத் நாட்டு மக்களுக்கு நேற்றிரவு விழிப்புடனே கழிந்தது என்றால் அது மிகையல்ல.

    குவைத்திலிருந்து பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

    ReplyDelete

Powered by Blogger.