Header Ads



கோத்தபாய எப்படி தப்பினார்? ஜனாதிபதி - பிக்குகள் சந்திப்பில் நடந்ததென்ன..??


(தமிழாக்கம் எம்.எல்.ஹாஜா சஹாப்தீன்)

26.11.2017 ஆம் திகதி இடப்பட்டு வெளியான ''ராவய" பத்திரிகையின் முதல் பக்க உப செய்தியாக ''ஜானாதிபதியை சந்தித்ததன் பின்னர் கோட்டாவை பிடிப்பது நிறுத்தம்" என்ற தலைப்பில் கட்டுரையாளர் ''அருண ஜயவர்தன"வினால் தரப்பட்டுள்ள செய்தி பின்வருமாறு.

அரச பாதுகாப்பு அமைச்சின் முன்னால் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவை கடந்த 22 ஆம் திகதி (புதன்கிழமை) கைது செய்ய ஆயத்தமாக இருந்தாலும். பிக்குமார் குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவை சந்தித்ததன் பிறகு அந்த கைது கால வறையரை இன்றி பிற்போடப்பட்டுள்ளது.

வீரகெட்டிய டீ ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலையை நிர்மாணிப்பதற்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை சம்பந்தமாக நீன்ட காலமாக விசாரித்து வரும் நிதி குற்றச்செயல் பொலிஸ் பிரிவினால் கடந்த 22 ஆம் திகதி கோடாபய ராஜபக்ஷவை கைது செய்ய தீர்மாணிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அதற்கு முன்னர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவை சந்திப்பதற்காக பெஜட் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற பிக்குமார் குழுவொன்று கோடாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற இந்த பிக்குமார் குழுவில் கோட்டே கல்யாண சாமசிரிதர்ம மகா சங்க சபையின் மகானாயக்க இத்தேபானே தம்மாலங்கார ஹிமி, கெஅலனி மகா விகரையின் விகாராதிபதி கொல்லுபிடியே மஹிந்த சசங்கரக்கித்த தேரோ,மெதகொட அபயதிஸ்ஸ தேரோ ஆகியோர் உள்ளடங்கினர் என அறிக்கை கிடைத்துள்ளது. ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டாமென பிக்குமார் விடுத்த கோரிக்கைக்கு கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன சுமுகமான பிரதிபலிப்பொன்றை வெளிப்படுதியுள்ளார்.

எப்படியாயினும் புதன்கிழமை கோடாபய ராஜபக்ஷ கைது செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட விசாரணைப் பிரிவில் வினவியபோது அதுபற்றிய அடுத்த நடவடிக்கைகள் தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரனில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டுக்கு மீண்டதன் பின்னர் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.