Header Ads



ஜனாதிபதியை சிக்க, வைப்பதற்கான சதிவேலை

இலங்கை இராணுவ வீரர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் மௌனம் சாதிப்பது ஜனாதிபதியை சிக்க வைப்பதற்கான சதிவேலையின் ஒரு அங்கமே என, கடற்படையின் முன்னாள் தளபதியும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சரத் வீரசேகர சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று (21) கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

“நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்திருப்பதாக இலங்கை இராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதற்கு, ‘தாருஸ்மான்’ ஆணைக்குழுவின் அறிக்கையே காரணம். 

“எனினும், கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை சுமார் எட்டாயிரம் பேர் மட்டுமே என்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் லோர்ட் நஸபி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மேலும், கொல்லப்பட்டவர்கள் சார்பில் இதுவரை எந்தவொரு முறைப்பாடும் ஐ.நா.வுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவரை இலங்கை அரசு பாராட்ட வேண்டும்.”

இதேவேளை, இராணுவ வீரர்களை குற்றவாளிகளாகச் சித்திரிக்கும் அறிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் மௌனம் காத்து வருவதாகவும் ஜனாதிபதியின் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் நோக்கிலேயே அவை இவ்வாறு நடந்துகொள்வதாகவும் தாம் சந்தேகிப்பதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.