Header Ads



சவுதி அரேபியாவில், சுதந்திரமாக உள்ளேன் - லெபனான் பிரதமர்


சவுதி அரேபியாவில் சுதந்திரமாக உள்ளதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாடு திரும்புவேன் என லெபனான் பிரதமர் சாத் ஹரிரி தெரிவித்துள்ளார்.

ஏமனில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சன்னி பிரிவை சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

ஜனாதிபதிக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி படைக்கு ஈரானும் ஆதரவளித்து வருகிறது. ஹவுத்தி படையை குறிவைத்து சவுதி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஹவுத்தி படையின் இத்தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்ததாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது.

லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி, சமீபத்தில் சவுதி அரேபியா சென்றார். அங்கிருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் லெபனானின் பலம் வாய்ந்த ஹிஸ்புல்லா ஷியா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா, சவுதி அரசு கட்டாயப்படுத்தியதால்தான் ஹரிரி பதவி விலகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஹரிரியை விடுவிக்க உத்தரவாதம் கிடைத்து உள்ளது என கூறி இருந்தார்.

இது குறித்து சாத் அல் ஹரிரி டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

ஹிஸ்புல்லா பிராந்திய தலையீடு காரணமாக, வளைகுடா அரபு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ஆபத்தில் உள்ளதாக லெபனானை எச்சரிக்கை செய்தார். இன்னும் சில நாட்களில் நான் லெபனான் திரும்புவேன். வளைகுடாவில் நூற்றுக்கணக்கான லெபனிய மக்களுடைய வாழ்வாதாரங்கள் ஆபத்தில் உள்ளன. அதே போல் வர்த்தகத்தில் லெபனான் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியம். என்னுடையஇராஜினாமா நாட்டிற்கு "நேர்மறை அதிர்ச்சியாக" கருதப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.