Header Ads



கல்வியமைச்சு முன், மௌலவிமார் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

மௌலவி ஆசிரிய நியமனம் கடந்த 2008 முதல் புறக்கணிக்கப்பட்டு வருவதால் "இஸ்லாமிய ஆசிரியர் சங்கமும், மௌலவி ஆசிரியர் நியமனத்திற்க்காக 2008 ல் பரீட்சைக்கு தோற்றி இதுவரை நியமனம் வழங்கப்படாதவர்களும் ஒன்றினைத்து இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் புதன்கிழமை நன்பகல் 10.00 மணியளவில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சுக்கு முன்னால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றை ஏற்ப்பாடு செய்துள்ளனர்.

அத்தோடு இதில் பங்கு கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 600 மௌலவி, மௌலவியாட்க்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளது.

இந்நியமனங்களை வழங்கும்படி பலமுறை கல்வியமைச்சையும், அதனோடு சம்பந்தப்பட்டோர்களையும் வேண்டுகோள் விடுத்தும் இதில் எந்தவொரு சாதகமான முடிவும் இதுவரைக் கிடைக்காததனாலேயே இம்முடிவுக்கு சென்றதாக இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவரும், சமாதான நீதவானுமாகிய கௌரவ எம். அனாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

1 comment:

  1. Great decision! please go ahead and do not give up under any circumstances as some of the so called Muslim parliamentarians now ready to defuse to spirit of the Moulavis for their rights.

    ReplyDelete

Powered by Blogger.