November 01, 2017

தேசப்பற்றாளர்கள் என்று சொல்பவர்கள், துவேசப் பற்றாளர்கள் - டிலான்

இரா. சம்பந்தனின் தலைமைத்துவத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏக்கிய (ஒற்றையாட்சி) என்ற சொற்பதத்தையோ அல்லது பௌத்த மதத்துக்கான அர்த்தப்படுத்தலையோ அப்படியே வைத்துக்கொள்ள ஒருபோதும் இணங்க மாட்டார்கள் என்பது மட்டுமல்லாது, தற்போதிருப்பதைப் போன்ற பாராளுமன்றமொன்றும் மீண்டும் வராது என்று நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, தேசிய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு கிடைத்திருக்கும் இந்த இறுதி வாய்ப்பை அனைவரும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் டிலான் பெரேரா, தேசிய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு கிடைத்திருக்கும் இந்த இறுதி வாய்ப்பை அனைவரும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

அத்துடன், சம்பந்தப்பட்ட விடயங்களில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அரசியல் கட்சிகள் பிடிவாதத்துடன் செயற்படாது விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 
அரசியலமைப்பு சபையில் நேற்று நடைபெற்ற வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

2000 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நீதி மற்றும் அரசியலமைப்பு அலுவல்கள் அமைச்சரான ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த அரசியலமைப்பை தான் நான் விரும்பினேன்.

நான் அப்போது நீதி மற்றும் அரசிலமைப்பு அலுவல்கள் பிரதி அமைச்சராக இருந்தேன். அந்த அரசியலமைப்பை தான் நான் விரும்பினேன். எனினும், அந்த அரசியலமைப்பு யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இன்று எனது கட்சி அந்த அரசியலமைப்பு யோசனைகளை விரும்பவில்லை. 

இந்த அரசியலமைப்பு பற்றி பீரிஸ் எழுதிய முன்னுரையில் ஐக்கிய மற்றும் சுயாதீன இலங்கை என்று தான் குறிப்பிட்டிருந்தார். அதில் "ஏக்கிய' (ஒற்றையாட்சி) என்ற வார்த்தை இருக்கவில்லை. ஏக்கிய என்ற வார்த்தையில்லாத மற்றும் பௌத்த மதம் பற்றிய தற்போதைய அர்த்தப்படுத்தல் இல்லாத அரசியலமைப்பொன்றை முன்வைத்துத் தான் நாம் அன்று நாடு முழுவதும் சென்றோம். எனினும், தற்போது சுதந்திரக் கட்சி ஏக்கிய என்ற பதம் வேண்டும் என்று கூறுவதனால் நானும் இன்று அந்த ஏக்கிய என்ற நிலைக்கு மாறியுள்ளேன். 

இதேநேரம், ஒரு தரப்பினரின் அபிலாஷை தான் மற்றைய தரப்பின் சந்தேகமாக இங்கு காணப்படுகிறது. இணக்கப்பாடொன்று இல்லாததன் காரணமாகத் தான் வழிப்படுத்தும் குழு ஏற்படுத்தப்பட்டு அரசியலமைப்பு சபையில் பேசி புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இணக்கப்பாடு காணப்படும் என்றால் இந்த ஏற்பாடுகள் எமக்கு தேவைப்படாது. 

அன்று அரசியலமைப்பு சபை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, 
9 திருத்தங்களுடன் அதை பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். அதையடுத்து தான் இந்த அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.

ஆகவே, அதை யாரேனும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவார்களாயின் அவர்கள் வாய்மூலம் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் வழிப்படுத்தும் குழுவிலும் அதேபோல், உபகுழுக்களிலும் அங்கம் வகித்திருந்தனர். அதன் பின்னர் தான் இந்த குண்டுத்தாக்குதல் பேச்சுக்கள் எல்லாம் வந்தன. 

கடந்த காலங்களில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ போன்றோர் தீர்வுகளுக்கு முயற்சித்தனர். ஆனால்  ஒவ்வொரு காலத்திலும் ஒரு தரப்பு முயற்சிக்கும் போது மறுதரப்பு அதற்கு எதிர்ப்பதே இங்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது. 


தமிழ் மக்களுக்கு பிரச்சினை கிடையாது என்றும் கூட பேசுகின்றனர். ஆனால், தேசிய சுதந்திர தினத்தின் போது தமிழ் மொழியில் தேசிய கீதத்தை இசைக்க 67 வருடங்கள் சென்றுள்ளன.


பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து வந்தால் நாம் பேசத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஏக்கிய என்று மும்மொழியிலும் போடுவதற்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதுவொரு சாதகமான சமிக்ஞையாகும். ஆகவே, சம்பந்தப்பட்ட விடயங்களில் இணக்கப்பாடுகளை காண்பதற்கு அரசியல் கட்சிகள் பிடிவாதத்துடன் செயற்படாது விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு உடன்பாட்டுக்கான மையப்புள்ளியொன்றுக்கு வர வேண்டும். நாம் சற்று விட்டுக்கொடுத்து அந்த இடத்திற்கு வருவோம். 


அதிகாரத்தை பகிர்வதற்கு சுதந்திரக் கட்சி விருப்பமாக உள்ளது. பாராளுமன்றத்துக்கு குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறுவோர் இருக்கும் வரை அதிகாரத்தை பகிரும் சுதந்திரக் கட்சியின் விருப்பம் அதிகரிக்கும். விமல் என்றாலும் சரி கமல் என்றாலும் சரி, தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பார்த்து சந்தோசப்படும் இவர்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள். இவ்வாறானவர்களுடன் தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூட்டம் நடத்துகின்றனர். இது வெட்கக்கேடானது. குண்டுத் தாக்குதலை கூறி எம்மை அச்சுறுத்த நினைத்தால் அதற்கு நாம் அஞ்சமாட்டோம்.  


பாராளுமன்றத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள் என்றால் அவர்களது இந்த கருத்தை தோற்கடிக்க வேண்டும். அதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும். அரசியலமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவர்களை தோற்கடிக்க வேண்டும். 


நாம் புதிய பிரவேசமொன்றுக்கு வருவோம். அதற்கு சிறந்த சந்தர்ப்பம் தான் இது. அரசியல் சர்வகட்சி மாநாடு, சர்வமத மாநாடு, நிபுணர்கள் மாநாடு கூட்டுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அது இதற்கு மேலாக செல்வதில்லை. இதை பலப்படுத்துவதற்காகத் தான் அது. 


ஹெல உறுமயவின் யோசனைகளில் கடுமையான விடயங்கள் இருக்கின்றன. அப்படியென்றால் அந்த யோசனைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள். ஆனால், ஹெல உறுமயவின் யோசனைகளை சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் போன்றோர் எடுத்துச் சம்பந்தன், சுமந்திரன் போன்றோரை துரோகிகள் என்று காண்பிக்கின்றனர். அவர்கள் அங்கு தூண்டிவிடுகின்றனர்.

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர் விட்டுக்கொடுத்து ஒரு நடுநிலைக்கு வருவதை அவர்கள் துரோகிகள் என்று குறிப்பிடுகின்றனர். இதில் எதிரான விடயங்களை மட்டுமே எடுத்துச் சென்று காண்பிக்கின்றனர். 


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கின்றனர். அது பற்றி பின்னர் பேசுவோம். ஆனால், தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என்பது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும். 
அரசியலமைப்பு சபையில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்வதற்கு தற்போது சூட்சுமமான முயற்சியொன்று காணப்படுகிறது.

இல்லாத குண்டு தாக்குதல் கதைகளை அதற்கு கூறுகின்றனர். ஆகவே, நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். குண்டுத் தாக்குதல் பற்றி பேசும் அந்த சதிகாரர்களின் முகத்தில் அறைய சுதந்திரக் கட்சி என்ற வகையில் நேர்மையுடனும் உறுதியுடனும் செயற்பட நாம் தயார். 


பிரச்சினையை தீர்ப்பதற்கு இது தான் எமக்கிருக்கும் இறுதி பஸ். சம்பந்தனின் தலைமைத்துவத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏக்கிய என்ற சொற்பதத்தையோ அல்லது பௌத்த மதத்துக்கான அர்த்தப்படுத்தலையோ அப்படியே வைத்துகொள்ள இணங்க மாட்டார்கள். மீண்டும் இப்படியொரு பாராளுமன்றமும் வராது. 

ஆகவே, இந்தப் பிரச்சினையை எமது பிள்ளைகளுக்கு விட்டு வைக்காமல் இந்த பாராளுமன்றத்தில் இந்த வருடத்தில் தீர்த்துக் கொள்வோம். அனைத்து மக்களுக்கும் அரசியலமைப்பில் முடிந்த சம உரிமைகளை வழங்குவோம். இவை யோசனைகள் மட்டும் தான். அவற்றில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை ஒதுக்கி விடுவோம். 


தேசப்பற்றாளர்கள் என்று சொல்பவர்கள் உண்மையில் தேசப்பற்றாளர்கள் கிடையாது. அவர்கள் துவேசப் பற்றாளர்கள். அவர்களை பாகுபாடின்றி தோற்கடிக்க வேண்டும். குண்டுத் தாக்குதல் நடத்துவோரை முடிந்தால் அதை செய்யுமாறு சவால் விடுத்து நாம் மக்களுடன் இணைந்து இந்த அரசியலமைப்பை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார்.  

8 கருத்துரைகள்:

Well-said.
முஸ்லிம்கள் புதிய அரசியலமைப்புக்கு எதிர். எனவே இவர்கள் எல்லாரும், எமது நாட்டின்......

டிலான்:- "துவேசபற்றாளர்கள்".
மங்கள:- "இனவாதிகள், பொறாமை, பழிவாங்கும் சிந்தனை கொண்டவர்கள்".

இதை சொல்வது அமைச்சர்கள், நானில்லை.

மாபெரும் உண்மையும் தத்துவமும் டிலானின் பேச்சில் தங்கியுள்ளது. இது "அரசியல் வர்த்தகர்களுக்கு" சரிப்பட்டு வருமா. அல்லது. டிலான் சொல்வது போல் இந்த விடயத்தை எங்கள் பிள்ளைகளிடம் கொடுப்போமா. மக்களே கொஞ்சம் நேரமெடுத்து சிந்தியுங்கள்.

இவனை போல ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி யாரும் இருக்க முடியாது. பாராளுமன்ற தேர்தல்வரை மஹிந்தவுடன் இணைத்து அரசாங்கத்தை திட்டி தீர்த்து பின் தேர்தல் முடிந்ததும் பல்டி அடித்து இன்று மஹிந்தவை விமர்சிக்கின்றான் கண்டிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இவன் கோமாளியாகிவிட்டான். நாட்டு பற்றில்லாத இந்த கோமாளிகள் நாட்டையே தமிழ் பிரிவினைவாதிகளுக்கு கொடுக்கும் அளவிற்கு கோமாளியாகிவிட்டான்

வட, கிழக்கு இணைப்பை ஆதரிப்பவர்கள், எல்லாருமே இனத்துவேஷிகள்.

அதாவது, விக்கி தொடக்கம் அனைத்து வட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இனத்துவேஷிகள்.

புதிய அரசியலமைப்பு அடியோடு தேவை இல்லை என்று சொல்பவர்கள், நாட்டுப்பற்றாளர்கள்

டிலான் பேச்சு இப்படித்தான் மாறும் - எதிர்க்கடசியில் இருந்தால் அல்லது அடுத்த தேர்தலின்பின்.

தம்பி அந்தோனி!
இந்தப் பத்தியையும் அமைச்சரின் கருத்தையும் சாதாரணமாக வாசித்து விளங்க முடியாத அளவிற்கு முஸ்லிமோபியா மூளையைத்தாக்கி உம்மைச் சீரழித்துவிட்டது. நல்லதொரு மனநல வைத்தியரை நாடவும்.
புதிய அரசியலமைப்புக்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவு என்பதும் வட, கிழக்கு இணைப்புக்கு மட்டுமே ஆதரவு இல்லை என்பதும் இவ் இணைப்பிற்கு சிங்களவர்களில் 90வீதமானவர்கள் எதிரானவர்கள் என்ற உண்மையையும் ஏன் உனது அறிவு மறுக்கிறது.

Vada kilakkai onru serthal awwalaw than...Pinangal thirumbawum elumbum

Lafir அண்ணே, "புதிய அரசியலமைப்பு" என்பது பல சட்ட திருத்தங்களை உள்ளடக்கிய "
ஒரு சட்டவரைபு". இதில் இணைக்கபட்டுள்ள பல விடயங்களில் வடகிழக்கு இணைப்பும் ஒன்று. இரண்டும் தனிதனியாக சட்ட வரைபுகள் அல்ல.

நீங்கள் "புதிய அரசியலமைப்பு" க்கு ஆதரவு என்றால் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எல்லாவற்றிக்கும் ஆதரவு தான்.
Understand or Bangoda-bus-stand?

உண்மையிலேயே நீ லூசிதான்டா.

Post a Comment