Header Ads



யாழ்ப்பாணத்தில் கடும் மழை, 9 ஆயிரம் பேர் பாதிப்பு

யாழில் தொடரும் கனமழையால் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளாதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் , 

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, இதுவரையில் 2,518 குடும்பங்களை சேர்ந்த 9,141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அத்துடன், 04 வீடுகள் முழுமையாகவும் , 159 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளன. 

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும், ஊர்காவற்துறை  பிரதேச செயலக பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 137 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேரும், நல்லூர்  பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேரும், கோப்பாய்  பிரதேச செயலக பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 893 பேரும்  பாதிக்கப்பட்டு உள்ளனர். 

அத்துடன், சங்கானை  பிரதேச செயலக பிரிவில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1 066 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேரும், தெல்லிப்பளை  பிரதேச செயலக பிரிவில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1, 253 பேரும், சாவகச்சேரி  பிரதேச செயலக பிரிவில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 759 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 1, 045 பேரும், மருதங்கேணி  பிரதேச செயலக பிரிவில் 643 குடும்பங்களைச் சேர்ந்த 2, 382 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

அதேவேளை, மழை தொடர்ந்தும் நீடிக்குமாயின் யாழ். மாவட்ட தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.