Header Ads



8 வருடங்களாக, என்ன செய்கிறார்கள்..?

முஸ்லிம்  தனியார்  சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய  திருத்­தங்கள் தொடர்­பான அறிக்கை  கால­தா­ம­த­மின்றி  அவ­ச­ர­மாக நீதி­ய­மைச்­சுக்கு  அனுப்பி வைக்­கப்­பட வேண்­டு­மென  நீதி­ய­மைச்சின்  செய­லாளர்,  முஸ்லிம் தனியார் சட்­டத்தில்  மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய  திருத்­தங்­களை சிபாரிசு செய்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­விடம்  கோரிக்கை  விடுத்­துள்ளார். 

இந்­நி­லையில் முஸ்லிம்  தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு, அதன் தலைவர்  ஓய்வு பெற்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம்  மர்சூப்  தலை­மையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை  கூடி­ய­போது குழுவின்  சில உறுப்­பி­னர்­களால் தயா­ரிக்­கப்­பட்ட மற்­றுமோர் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவ் அறிக்­கையை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர்  அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி குழுத்­த­லை­வ­ரிடம் கைய­ளித்தார். அவ்­வ­றிக்கை 10 விட­யங்கள் தொடர்­பான அறிக்­கை­யாகும். 

குறிப்­பிட்ட அறிக்­கையில் கையொப்­ப­மிட்­ட­வர்கள் அனை­வரும்  கடந்த 26 ஆம் திகதி நடை­பெற்ற கூட்­டத்­துக்கு சமு­க­ம­ளிக்­கா­மை­யி­னாலும் கையொப்­ப­மிட்­டி­ருந்த ஒரு உறுப்­பினர் சுக­யீனம் கார­ண­மாக  கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­யேறிச் சென்­ற­மை­யாலும் குறித்த அறிக்கை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை. 

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு ஏற்­க­னவே  திருத்­தங்கள் தொடர்பில் அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரித்து உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்ளத் தயா­ராக இருந்த நிலையில் குழுவின் உறுப்­பி­னர்கள் சிலரால் மற்­று­மொரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு கைய­ளிக்­கப்­பட்­டதால்  இந்தப் பணி மேலும்  தாம­த­மா­னது. 

எனவே,  ஓய்வு பெற்ற முன்னாள்  நீதி­ய­ரசர்  சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு தனது அடுத்த  அமர்­வினை  எதிர்­வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திக­திக்கு பிற்­போட்­ட­துடன் அன்­றைய தினம் ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­வுள்­ள­துடன், புதி­தாகக்  குழுவின்  சிலரால்  கைய­ளிக்­கப்­பட்­டுள்ள  அறிக்­கை­யுடன்  இரண்டு அறிக்­கைகள் நீதி­ய­மைச்சர் தலதா அத்து கோர­ள­விடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. 

இதே­வேளை நீதி­ய­மைச்­ச­ரிடம்  இரு அறிக்­கைகள் சமர்ப்­பிக்­காது  ஓர் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதே சிறந்­தது என  குழு கரு­து­வதால் எதிர்­வரும்  டிசம்பர் மாதம்  3 ஆம் திகதி கூடி  இது­தொ­டர்பில் ஆரா­யப்பட­வுள்­ளது. 

இதே வேளை, முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழு தனது அமர்­வு­களை நீதி­ய­மைச்சின்  கேட்போர்  கூடத்­திலே  நடத்த வேண்டும் என  நீதி­ய­மைச்­சரின் செய­லாளர் ஜய­மான்ன குழுவின் தலைவர்  சலீம் மர்­சூபை  கடிதம் மூலம்  கோரி­யுள்ளார்.  இக்­க­டிதம் கடந்த செப்­டெம்பர் மாதம் 19 ஆம் திகதி அனுப்பி  வைக்­கப்­பட்­டுள்­ளது. 

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களை சிபாரிசு செய்­வ­தற்கு 2009 ஆம் ஆண்டு  அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் ஓய்வு பெற்ற  முன்னாள்  நீதி­ய­ரசர்  சலீம்  மர்­சூபின் தலை­மையில் இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. 

எட்டு வருட கால­மா­கியும் குறிப்­பிட்ட குழு தனது பணி­யினை  பூர­ணப்­ப­டுத்­தாது கால­தா­ம­தப்­ப­டுத்தி வரு­வதால் பல விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வந்­தன. 

இந்த நட­வ­டிக்­கை­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக 2016 அக்­டோபர் மாதம் அப்போதைய நீதியமைச்சர் விஜயதாச  ராஜபக் ஷவினால் அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவில்  அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன்,  பைசர் முஸ்தபா,  எம்.எச்.ஏ.ஹலீம், சந்திராணி பண்டார, சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே  ஆகியோர்  அங்கம் வகிக்கின்றனர்.

ARA.Fareel

2 comments:

  1. Justice delayed is justice denied. Our Muslims leaders have always been slow in everything. This is one of many tasks entrusted tonthe so called leaders. What would an average person think...incapable leaders or inability...

    ReplyDelete
  2. Please Do not forget to Call also BBS with ACJU. Its very Important for our ACJU ...

    ReplyDelete

Powered by Blogger.