Header Ads



'தல பூட்டுவா' என்ற யானை கொலையின், சூத்திரதாரியான பௌத்த பிக்குவை தேடி 5 குழுக்கள்

கல்கமுவவில் கொல்லப்பட்ட ‘தல பூட்டுவா’ என்ற பிரபல யானை திட்டமிட்டே கொலை செய்யப்பட்டது என்றும் யானையின் தந்தம் மற்றும் முத்துக்களைக் குறியாகக் கொண்ட இச்சம்பவத்தின் பின்னணியில் பௌத்த பிக்கு ஒருவர் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தேசிய சுற்றாடல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் பிக்குவின் பெயர் இதுவரை வெளியிடவில்லை.

யானையின் கொலை குறித்து ஆராய்ந்த தேசிய சுற்றாடல் குழுவினர், வனத் துறை இயக்குனரை இன்று (29) சந்தித்தபோதே இதைத் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குத் துறை அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் ஆலோசனையின் பேரில் ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த யானையைக் கொலை செய்தவர்கள் உடனடியாக அதன் தந்தத்தை அறுத்தெடுத்ததாகவும் யானையின் முத்துக்களை விற்க முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.