Header Ads



50 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டம், விதிமுறைகள் தளர்வு, கால அவகாசமும் நீடிப்பு

வடக்கு கிழக்கில் 50,000 செங்கல் மற்றும் சீமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது. 

அத்துடன் இந்த வீடுகளை அமைப்பதற்கான நியமங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல் மற்றும் சீமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான செலவானது உருக்கு வீடுகளைக் கட்டுவதற்கு ஏற்படும் செலவை விட அதிகமான போதிலும்இ  உருக்கு வீடுகளுக்கு வடக்குஇ கிழக்கு மக்கள் தமது எதிர்ப்பைக் காண்பித்த நிலையில் செங்கல் மற்றும் சீமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பரிந்துரைகளை கையளிப்பதற்கான காலஅவகாசம் நவம்பர் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைக் கையாளும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சானது செங்கற்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சீமெந்தினாலான வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளுக்கான வேண்டுகோள்  அடங்கிய பின்னிணைப்பு ஒன்றை தனது திட்டத்துடன் இணைத்துள்ளது.

வடக்கு கிழக்கில் சில இடங்களில் செங்கற்களைப் பெற்றுக்கொள்வது சிரமம் என்பதன் காரணமாக சீமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான அனுமதியை அமைச்சு வழங்கியுள்ளது.

இத்திட்டத்தில் கட்டுமானச் செலவுகள் குறைக்கப்பட்டு மூலப்பொருட்களுக்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஆற்று மண்ணைப் பயன்படுத்தி வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரை முன்னர் முன்வைக்கப்பட்ட போதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கடற்கரை மணல் மற்றும் சாணை மணல் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மரத்தைப் பயன்படுத்துவது தொடர்பிலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது இவ்வீட்டுத் திட்டத்தின் கீழ் முன்னர் முதிர்ந்த மரங்களைப் பயன்படுத்தியே அனைத்துக் கதவுகளும் போடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து வீட்டின் முன்கதவு மற்றும் பின்கதவு ஆகியன மட்டும் முதிர்ந்த மரப்பலகைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வீட்டின் உள்கதவுகள் வீட்டு உரிமையாளரின் விருப்பிற்கேற்ப எந்த வகையான மரத்திலும் போடப்பட முடியும் எனவும் இதேபோன்று மலசலகூடத்திற்கான கதவும் சாதாரண மரத்தில் இடப்படலாம் எனவும் திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் நீடித்த பயன்பாட்டைக் கொண்ட வீடு அமைக்கப்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்காகும்.

கொத்தனார் வீடுகள் வடக்கு கிழக்கின் கலாசாரம்இ வாழ்வு முறைமை மற்றும் காலநிலை போன்றவற்றுக்குப் பொருத்தமான வீட்டு மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால்இ சிறிலங்கா அரசாங்கமும் இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் விரும்பும் இவ்வாறான கொத்தனார் வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதியளித்துள்ளமை மகிழ்ச்சி தருவதாக வீடமைப்பு நிறுவனம் ஒன்றால் அண்மையில் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வீடுகளைக் கட்டுவதற்கு வீட்டின் உரிமையாளர்களும் தமது பங்களிப்பை வழங்குவது மிகவும் முக்கியமானது எனவும் இதன் மூலம் கிராமங்களில் வாழும் மக்கள் வேலை வாய்ப்பைப் பெறமுடியும் எனவும் இது வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனாளிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பயனுள்ள ஆலோசனைகளைத் தொடர்ந்து சூழல் நேயம்மிக்க வீடுகளைக் கட்டுவதற்கான பொருத்தமான தெரிவுகள் இத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொத்தனார் வீடுகள் என்பது செங்கற்கற்களால் மட்டுமல்லாதுஇ சீமெந்துக் கற்கள் போன்றவற்றைக் கொண்டும் கட்டப்பட முடியும். ஆகவே செலவைக் கருத்திற்கொண்டும் சூழலுக்குப் பொருத்தமான வீடுகள் தெரிவு செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது.

குறிப்பாக வடக்கைப் பொறுத்தளவில் செங்கல் வீடுகள் பொருத்தமானதல்ல. தற்போது இவ்வாறான சில பிரச்சினைகள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சால் தயாரிக்கப்பட்ட வீட்டுத் திட்ட அறிக்கையின் பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமுதாயப் பங்களிப்புடன் கூடிய வீடுகளைக் கட்டுவதற்கான அனுமதியை நல்லிணக்க அமைச்சின் பரிந்துரைகளுக்கான வேண்டுகோள் மிகக் குறைந்த அளவிலேயே வழங்கியுள்ளதாகவும் இதற்குப் பதிலாக ஒப்பந்தகாரர் மைய அணுகுமுறை முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வீடுகளை நிர்மாணிக்கும் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது இவ்வாறான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு சமுதாயப் பங்களிப்புடன் கூடிய வீடுகளைக் கட்டுவதற்கான பின்னிணைப்பை நல்லிணக்க அமைச்சு வெளியிட்டுள்ளது.

இத்திட்டமானது பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் இத்திட்டமானது ஒரு ஆண்டிற்குள் பூர்த்தி செய்யப்படுவதற்கான காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.