November 06, 2017

கல்முனை 4 ஆக பிரிப்பு - பொய் சொல்வது யார்..??


கல்­முனை மாந­கரில் மாற்றம் இல்லை என மாகாண சபைகள்  மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் தெரி­வித்­தாலும், கல்­முனை மாந­க­ர­ச­பையை நான்கு உள்­ளூ­ராட்சி  மன்­றங்­க­ளாகப் பிரிக்கும் எமது கோரிக்­கையை  நாம் கைவிடப் போவ­தில்லை. எமது  நிலைப்­பாட்டில் உறு­தி­யா­கவே இருக்­கிறோம். எம­து­போ­ராட்­டங்­களைத் தொடர்ந்து முன்­னெ­டுப்போம் என விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்­சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்­கி­ரஸின் பிரதித் தலை­வ­ரு­மான  எச்.எம். எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

எமது மக்கள் ஆத்­திர மேலீட்­டி­னாலே சாந்­த­ம­ரு­துவில் எங்கள் கொடும்­பா­வி­களை எரித்­தார்கள்.  இதனை நாம் நிரந்­தர  பகை­யாகப்  பார்க்­க­வில்லை. கல்­முனை  மாந­க­ர­சபை பிர­தேசம் நான்கு பிரி­வு­க­ளாக  பிரிக்­கப்­பட்­டதும் நிச்­சயம் அவர்கள் எமக்கு ஆத­ரவு வழங்­கு­வார்கள். இதனைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் திட­சங்­கற்பம் பூண்­டுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ரு­துவில் இடம்பெற்ற  மக்­களின் போராட்டம் மற்றும் கல்­முனை மாந­க­ர­ச­பையை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரிக்கக் கோரும் கோரிக்­கையும் அது தொடர்­பான ஆர்ப்­பாட்­டங்கள் பற்றி வின­விய போதே பிர­தி­ய­மைச்சர்  ஹரீஸ் ‘விடி­வெள்ளி’ க்கு இவ்­வாறு  தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கடந்த 23,24 ஆம் திக­தி­களில் அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற  பேச்சுவார்த்­தையின் போது  கல்­முனை  மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரிக்­கு­மாறு  பிர­தமர் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கு  உத்­த­ர­விட்டார். இந்தப் பேச்­சு­வார்த்­தையில்  ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்­கி­ரஸின்  தலை­வரும்,  அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின்  தலை­வரும்  அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யூதீன்,  மாகா­ண­ச­பைகள் உள்­ளூ­ராட்சி  அமைச்சர் பைசர் முஸ்­தபா உட்­பட நானும் கலந்து கொண்­டி­ருந்தேன்.

ஏற்­க­னவே அடுத்த வருடம்  மார்ச் மாதம் நடை­பெற திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தவிர்க்க முடி­யாத  கார­ணங்­க­ளினால்  எதிர்­வரும் ஜன­வரி  மாதத்­துக்கு முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­த­னாலே கல்­முனை விவ­காரம் இந்த நிலை­மைக்­குள்­ளா­னது, தடைப்­பட்­டது. என்­றாலும் கல்­முனை மாந­கர  சபை பிர­தே­சத்தை நான்­காகப் பிரிப்­ப­தற்­கான  அங்­கீ­கா­ரத்தை பிர­தமர் வழங்­கி­யுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி கல்­முனை மற்றும் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்­களின் பிர­தி­நி­திகள் கலந்துகொண்ட கூட்­டத்­திலும் கல்­முனை மாந­க­ர­சபை பிர­தேசம்  நான்­காகப் பிரிக்­கப்­பட வேண்­டு­மென இணக்கம் காணப்பட்டுள்ளது.

மக்கள் எம்மீது கொண்ட ஆத்திரத்தினால் எமது கொடும்பாவிகளை எரித்தார்கள் என்பதற்காக எமது  கோரிக்கையை கைவிடப்போவதில்லை. நான்கு பிரதேச சபைகளைப் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்தும் முன்னெடுப்புகளை மேற்கொள்வோம் என்றார்.

அமைச்சர் பைசர் மறுப்பு

கடந்த மாதம் அலரி மாளி­கையில் நடை­பெற்ற கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரிக்­கு­மாறு என்­னிடம் கூற­வில்லை. பிரிக்க வேண்டாம் என்றும் கூற­வில்லை. அப்­ப­குதி அர­சியல் கட்­சிகள் மற்றும் மக்­களின் ஆலோ­ச­னை­களை இது தொடர்பில் பெற்றுக் கொள்­ளு­மாறே பிர­தமர் என்­னிடம் கூறினார்என நேற்று மாலை மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா, ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­ல் இவ்­வாறு தெரி­வித்தார்.

கடந்த மாதம் அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் கல்­மு­னையை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரிக்­கு­மாறு பிர­தமர் உங்­க­ளுக்கு உத்­த­ர­விட்­ட­தாக பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் தெரி­வித்­துள்­ளாரே என்ற கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

மேலும் அவர் பதி­ல­ளிக்­கையில், "எந்­த­வொரு முடி­வி­னையும் அனை­வ­ரி­னதும் ஆலோ­ச­னை­களைப் பெற்றே மேற்­கொள்­ளும்­ப­டியும் பிர­தமர் என்னிடம் கூறினார். இந்த அமைச்சைப் பொறுப்­பேற்­றி­ருந்த முன்னாள் அமைச்சர்கள் போன்று நான் ஒருபோதும் செயற்படப்போவதில்லை. தனித்து எந்த முடிவினையும் மேற்கொள்வதில்லை" என்றார்.

ARA.Fareel

2 கருத்துரைகள்:

It is like abolishing executive precedent. This mater will be like beggars wound.

கல்முனையில் முஸ்லிம்கள் மட்டும் வாழவில்லை என்பதை நினைவில் வைத்தால் சரி

Post a Comment