November 03, 2017

வீதியில் கண்­டெ­டுத்த 4 இலட்­சத்தை, உரி­ய­வரிடம் ஒப்­ப­டைத்­த­ சாரதி - குவிகிறது பாராட்டு


வீதியில் கண்­டெ­டுத்த நான்கு இலட்­சத்து 11 ஆயிரம் ரூபா  பணத்தை முச்­சக்­கர வண்டி சார­தி­யான விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் ( வயது 31) கண்டி பொலி­ஸாரின் ஊடாக உரி­ய­வரை  கண்­டு­பி­டித்து ஒப்­ப­டைத்­த­ அவரின் நேர்­மை­யான செய­லை அனை­வரும் பாராட்­டு­கின்­றனர்.

கண்டி நகரில் முச்­சக்­கர வண்டி ஓட்டும் இளை­ஞ­ரான விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் தமது முச்­சக்­கர வண்­டியை செலுத்திக் கொண்டு வந்து அதனை கண்டி நகரில் அமைந்­துள்ள ஸ்ரீ  விக்­கி­ரம ராஜ­சிங்க  மாவத்தை வீதியில்  நிறுத்த முற்­பட்­ட­போது அநா­த­ர­வாக கிடந்த  பொதி­யொன்றை கண்­டெ­டுத்­துள்ளார்.

அதனை சந்­தே­கத்தில் அவர் பிரித்து  பார்த்­த­போது அதனுள் நான்கு இலட்­சத்து 11 ஆயி­ரம் ரூபா பணம் இருப்­பதை கண்டு அவர் அதனை உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்ற திட­சங்­கற்­பத்­துடன் கண்டி பொலி­ஸ் தலை­மை­ய­கத்­துக்குச் சென்று  பொலிஸ் உய­ர­தி­கா­ரி­களிடம் பணத்தை கண்­டெ­டுத்த விப­ரத்தை கூறி  அதன் உரி­மை­யா­ளரை கண்டுபிடித்து ஒப்­ப­டைக்க தான்  விரும்­பு­வ­தாக தெரி­வித்து பணத்தை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்ளார்.

பொலிஸார் பெரும் முயற்­சி­களை மேற்­கொண்டு  உரி­ய­வரை கண்­டு­பி­டித்­துள்­ளனர். அவர் காலி ஹினி­தும பிர­தே­சத்தை சேர்ந்த பிர­பல வர்த்­தகர் ஒரு­வ­ராவார்.இவர் கடந்த  சில தினங்­க­ளுக்கு  முன்பு தமது  பிறந்த தினத்தை முன்­னிட்டு ஸ்ரீ தலதா மாளி­கைக்கு விஜயம் செய்து பூஜை வழி­பா­டு­களில் கலந்து கொள்ள வருகை தந்­துள்ளார். தனது வழி­பாடு நிறை­வ­டைந்­ததும் கண்­டி­ விக்­கி­ர­ம­சிங்க மாவத்தை வாகன தரிப்­பி­டத்தில் தனது காரை நிறுத்­தி­விட்டு முச்­சக்­கர சாரதி ஒரு­வ­ரிடம் இரவு வேளை தங்­கு­வ­தற்­காக  சிறந்த விடு­தி­களை கேட்­டுள்ளார்.

விப­ரங்­களை அறிந்து கொண்ட வர்த்­தகர் கண்டி வாவிக்­கரை அருகில் உள்ள விடுதி ஒன்­றுக்குச் சென்று அங்கு தனது காரை நிறுத்­தி­விட்டு தனது பணப்­பையை தேடி­யுள்ளார்.ஆனால் அது இருக்­க­வில்லை. அதிர்ச்­சி­ய­டைந்த அவர் பகல் வரும் வழியில் நிட்­டம்­பு­வயில் பகல் உண­வுக்காக விடுதி ஒன்­றிற்கு சென்­றி­ருந்தார்.அங்­குதான் பணப்­பையை தவற விட்­டி­ருக்­கலாம் என கருதி அங்கு விரைந்து சென்று அங்கிருந்த சீ.சீ.டி.வி  பதிவுகளை பார்த்­த­போது வியா­பாரி பணப்­பை­யுடன் அங்­கி­ருந்து வெளி­யே­று­வது அதில்  புலப்­பட்­டுள்­ளது.

இதனால் அப்­பணம் தமக்கு மீள கிடைக்­கப்­போ­வ­தில்லை என்று  கருதி ஹினி­து­மைக்கு திரும்­பி­விட்டார். விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் கண்­டெ­டுத்த பணப்பை பொதியில் உரி­மை­யா­ளரின் தேசிய அடை­யாள அட்­டையும் இருந்­துள்­ளது.

இத­னை­க் கொண்டு பொலிஸார் உரி­ய­வரை தொடர்பு கொண்டு கண்­டிக்கு  வர­வ­ழைத்து  விசா­ரணை செய்த பின்னர்  பொலிஸ் நிலைய தலைமை பொறுப்­ப­தி­காரி உரி­ய­ பணத்தை  விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் மூலம் அவரிடம் கைய­ளிக்க செய்­தனர்.

முச்­சக்­கர வண்டி சார­தி­யான  விஸ்­வ­நா­தனின் சிறந்த நேர்­மை­யான  செய்­கையை பொலிஸ் அதிகாரிகளும் குறிப்பிட்ட வர்த்தகரும் பாராட்டியதோடு  உரிமையாளரான  வர்த்தகர் அவரின் நேர்மைக்காக  ஒரு இலட்சம் ரூபா பணத்தை பரிசாக கொடுத்த போதும் அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார். இவரது இச்செயலை கண்டி மாநகரில் பலதரப்பட்டவர்களும் பாராட்டுகின் றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment