Header Ads



கல்முனையினை 4 காக பிரிக்க தீர்மானம்


கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சில் இன்று (17) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையினை பிரித்து உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பது சம்பந்தமாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இவ் உயர் மட்டக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளான எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், கோடீஸ்வரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், ஆசாத் சாலி, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை மாநகர சபை பிரிப்பு சம்பந்தமாக குறிப்பாக சாய்ந்தமருது கல்முனை விவகாரங்கள் அலசி ஆராயப்பட்டு மூன்று முஸ்லிம் பெரும்பாண்மை சபைகளையும் ஒரு தமிழ்ப் பெரும்பாண்மை சபையையும் கொண்டதாக நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் தரப்பு பிரதிநிதிகள் சிலர் நியாயமற்ற கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துப் பேசியபோது பிரதி அமைச்சர் ஹரீஸ் சரியான விளக்கத்தைக் கொடுத்து அவர்களைத் தெளிவுபடுத்தியதனால் நான்கு சபைகளை உருவாக்குவது என்ற இணக்கப்பாடு காணப்பட்டு அத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கல்முனையினை நான்கு உள்ளுராட்சி சபைகளாக பிரிப்பது தொடர்பில் கல்முனையில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாட்டை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு தெளிவுபடுத்தினார். குறித்த நான்கு சபைகளும் 1987 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த சபைகளின் எல்லைகளுடன் உருவாக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். இந்த எல்லைகள் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியினாலும் உருவாக்கப்பட்டதல்ல, 1897இல் பிரிடிஸ் ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட எல்லைகளாகும் எனவே இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

இதன்போது முஸ்லிம் தமிழ்ப் பிரதேசங்களின் புதிய எல்லை கோரிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இருந்தபோதிலும் இது தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் 5 பேரையும் தமிழ் பிரதிநிதிகள் 5 பேரையும் கொண்ட குழு மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடாத்துவதென  முடிவெடுக்கப்பட்டது. 

(அகமட் எஸ். முகைடீன்)

3 comments:

  1. நல்ல விஷயம்... இந்த பிரச்சினை சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.. ஆனால் எந்த வித அரசியல் அதிகாரத்தை இப்பிரதேஷத்தில் கொண்டிராத ஆசாத் சாலி கலந்துகொள்ள என்ன அவசியம் என்று விளங்கவில்லை... இவர் இப்படியான விஷயங்களை வைத்து அரசியல் நாடகம் நடத்துவதில் மிகவும் சாணக்கியர்..

    ReplyDelete
  2. க‌ல்முனை முஸ்லிம்க‌ள் மிக‌ அவ‌ச‌ர‌மாக‌வும் அவ‌சிய‌மாக‌வும் சிந்திக்க‌ வேண்டிய‌ கால‌த்தில் இருக்கிறோம்.
    இன்று மாகாண‌ ச‌பை அமைச்சில் ந‌டை பெற்ற‌ க‌ல்முனை ச‌ம்ப‌ந்த‌மான‌ கூட்ட‌த்துக்கு க‌ல்முனை ம‌க்க‌ள் வாக்குப்பெற்ற‌ பிர‌திநிதியாக‌ ஹ‌ரீஸ் ம‌ட்டுமே வ‌ந்தார். வேறு மாகாண‌ ச‌பை உறுப்பின‌ரோ முன்னாள் மாந‌க‌ர‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ளோ வ‌ர‌வில்லை.

    அதே வேளை க‌ல்முனை Tamil ம‌க்க‌ள் சார்பில் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் எம் பீக்க‌ள், உறுப்பின‌ர்க‌ள் என‌ ப‌ல‌ரும் வ‌ந்த‌ன‌ர்.
    முஸ்லிம்க‌ள் சார்பில் அதாவுள்ளாவும் வ‌ந்த‌தால் கொஞ்ச‌ம் ச‌ம‌ ப‌ல‌ம் இருந்த‌து. அதாவுள்ளா வ‌ராவிட்டால் கூட்ட‌மைப்பின் பேச்சை தாங்க‌ முடியாம‌ல் ஹ‌ரீஸ் வெளியேறியிருப்பார்.

    இந்நிலையில் ஜ‌னாதிப‌தியிட‌ம் எந்த‌க்க‌ட்சிக்கு செல்வாக்கு உள்ள‌து சிந்தியுங்க‌ள். நிச்ச‌ய‌ம் த‌மிழ் கூட்ட‌மைப்புக்கே இட‌முண்டு. ஆக‌வே அவ‌ர்க‌ள் சொல்வ‌தை ஏற்கும்ப‌டி அறிவித்தால் சாய்ந்த‌ம‌ருதுக்கு ஒரு பிர‌தேச‌ ச‌பை, க‌ல்முனைக்குடிக்கு ஒரு ச‌பை, த‌ர‌வைக்கோவிலில் இருந்து தாள‌வெட்டுவான் வ‌ரை மாந‌க‌ர‌ ச‌பை என‌ பிரிக்க‌ப்ப‌ட‌லாம்.
    இந்த‌ நிலையில் க‌ல்முனையை தலைமைய‌க‌மாக‌ கொண்ட‌ உல‌மா க‌ட்சியையாவ‌து ப‌ல‌ப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மாகும். ம‌க்க‌ள் வாக்கு ப‌ல‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளே அர‌சிய‌லில் எடுப‌டும் என்ப‌தை க‌ல்முனை ம‌க்க‌ள் இன்ன‌மும் புரியாவிட்டால் எதிர் கால‌ த‌லை முறைக‌ள் உங்க‌ளைத்தூற்றும். ஆக‌வே சிந்த‌னை செய்யுங்க‌ள். ஒற்றுமைப்ப‌டுவோம் வாருங்க‌ள்.
    - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
    உல‌மா க‌ட்சி

    ReplyDelete

Powered by Blogger.