Header Ads



வீட்டுக்காரிடம் தகராறு, பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 குழந்தைகள் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர் உள்பட 5 பேர் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெஹமா கவுண்டி பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். 

இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூடு கேட்டவுடன் அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும் விதமாக வகுப்பறைகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். எனினும் அந்த நபர் விடாமல் பூட்டிய கதவுகளை நோக்கி சுட்டதில் ஒரு குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் வகுப்பறைகளை பூட்டியதால் பெயரியளவிலான உயிரிழப்பில் இருந்து தப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியிதாவது: 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தெஹமா கவுண்டி பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் துப்பாக்கியால் சுட்ட நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். 

மேலும், அங்கிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தினர். துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே இருந்த தகராறால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களில் அந்த நபரின் பக்கத்து வீட்டுக்கார பெண்ணும் ஆவார். 


கடந்த வாரம் டெக்சாஸ் மாகாணத்தில் பாப்டிஸ்ட் சர்ச் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.