Header Ads



அரச ஊழியர் சம்பளம் 3,000 முதல் 14,000 ரூபாவரை உயரும்

அரச துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். 

அரச துறையில் குறைந்த சம்பளம் பெறும் அலுவலக உதவியாளரின் அடிப்படைச் சம்பளம் 3075 ரூபாவினாலும், அதிகமான அடிப்படை சம்பளம் பெறும் சட்டமா அதிபரின் அடிப்படைச் சம்பளம் 14 ஆயிரம் ரூபாவினாலும் 
அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான விவாத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்ட அமைச்சர் அபேவர்தன, 2020 ஆம் ஆண்டு வரை அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பலப்படுத்தப்படும் என்றும் இதன் நிமித்தம் வருடாந்தம் 12 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"கடந்த காலங்களில் வெற்றிகாண முடியாத பல துறைகளிலும் வெற்றியீட்டுவது குறித்து இந்த வரவு  செலவுத் திட்டத்தினூடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் வடக்கு, கிழக்கு குறித்து முழுக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல், காலி, பொலனறுவை மாவட்ட மக்களின் பல பிரச்சினைகளை அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காலி மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு இலவசமாக அடையாள அட்டை வழங்கியிருக்கிறோம். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளிலும் இவ்வாறு இலவசமாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு இவற்றை வழங்க இருக்கிறோம்.

அலுவலக உதவியாளரின் அடிப்படைச் சம்பளம் 2015 ஆம் ஆண்டில் 14 ஆயிரம் ரூபாவாக இருந்தது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் அந்த தொகை 17,450 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அது 20,525 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. 

அதேபோல், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதமாகும் போது அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 23,600 ரூபாவாக அதிகரிக்கப்படும். இது 15 வீத உயர்வாகும். இதன் பிரகாரம் அடுத்த வருடத்தில் 3,075 ரூபா அடிப்படை சம்பளத்தில் அதிகரிக்கப்படுகிறது. 

2015ஆம் ஆண்டில் நிபுணத்துவ மருத்துவரின் அடிப்படை சம்பளம் 42 ஆயிரம் ரூபாவாக இருந்துதுடன், 2016 ஆம் ஆண்டில் அது 51,512 ரூபாவாகவும் 2017  ஆம் ஆண்டில் 60,634 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் இவர்களின் அடிப்படைச் சம்பளம் 69,750 ரூபாவாக 9,122 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. 

அலுவலக சிற்×ழியரின் மேலதிக நேர கொடுப்பனவு மணித்தியாலத்திற்கு 50 ரூபாவிலிருந்து 94 ரூபா வரை அதிகரிக்கிறது. சட்டமா அதிபரே அரச துறையில் அதிகமான அடிப்படை சம்பளத்தை பெறுகிறார். 2015 ஆம் ஆண்டில் அது 67 ஆயிரம் ரூபாவாகவும் 2016 ஆம் ஆண்டில் 81 ஆயிரம் ரூபாவாகவும் இருந்தது.

அவரது அடிப்படைச் சம்பளம் 2017 ஆம் ஆண்டில் 95 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இது 15 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறான அடிப்படையில் சம்பள அதிகரிப்பை சீர் செய்ய வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பிற்காக வருடாந்தம் 12 பில்லியன் ரூபா அவசியமாகிறது. 2020 ஆம் ஆண்டு வரை அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பலப்படுத்தப்படும். ஆகவே, இவ்வாறான நிலையில் அரச துறையில் தன்னார்வ ஓய்வுத் திட்டம் கொண்டுவரப்பட்டாலும் யாரும் விலக மாட்டார்கள் என்று தெரிவித்தார். 

பா.கிருபாகரன், டிட்டோகுகன்

2 comments:

  1. Some people get salty increments. Poor people pay the increments by increasing commodity price. Always small amount of people get benefits out government, large proportion of people even find it harder to fulfill there daily requirements.
    What sad reality.

    ReplyDelete
  2. This is to cheat the govt. servants because of provincial election.

    ReplyDelete

Powered by Blogger.