Header Ads



2 கோடி ரூபா இலஞ்சம் கொடுத்து, விலைபேசி வாங்கப்பட்ட தமிழ்த் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி ரூபா இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

படைப்பாளி ஜெசுதா யோ எழுதிய உயிர் வலி என்ற கவிதை நூல் இன்று -20- மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பின் மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்த பின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

போர் நிறைவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு எங்கள் மண்ணில் ஒரு ஆட்சிமாற்றம் வேண்டும் என பல நாடுகள் விரும்பியதன் அடிப்படையில் தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஆனால் எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை எங்களுடைய தலைமைகள் சரியாக பயன்படுத்தியிருந்தால் நாம் எமது இலக்கினை அடைந்திருக்க முடியும்.

பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்களின் உயிர்த் தியாகத்தினால் கிடைத்த சந்தர்ப்பம் கைநழுவி சென்றுள்ளது. இந்த ஐ.நாவின் இரண்டு வருடகாலத்திற்கு எங்களுடைய தலைமைகள் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவளிக்கின்ற நிலைதான் காணப்படுகின்றது.

நாடாளுமன்றில் 225 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆண்டு தோறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு கோடி ரூபா நிதி தான் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபா நிதி கொடுக்கப்பட்டு இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு பெறப்பட்டிருக்கிறது.

வெறுமனே இரண்டு கோடி ரூபா இலஞ்சம் கொடுத்து விலைபேசி வாங்கப்பட்டுள்ளார்கள் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.