Header Ads



27 ஆண்டுகளின் பின் சவூதி விமானம், ஈராக்கில் தரையிறங்கியது


அரசுக்கு சொந்தமான சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் விமான சேவை 27 ஆண்டுகளின் பின் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் ஈராக்கிற்கு வழக்கமான விமான பயணங்களை ஆரம்பித்துள்ளது.

சவூதி ஜித்தா நகரில் இருந்து பக்தாதை வந்திறங்கிய முதல் விமானத்தில் விமானத்துறை இயக்குனர் சலேஹ் பின் நாசர் அல் ஜஸ்ஸருடன் பயணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இருந்தனர்.

ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் 1990 ஆம் ஆண்டு குவைட்டை ஆக்கிரமித்ததன் பின் சவூதி அரேபியா மற்றும் ஈராக்கிற்கு இடையில் விமானப் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கை குறைக்க ஈராக்குடனான உறவை பலப்படுத்த சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் முயன்று வருகிறது.

சவூதி மற்றும் ஈராக்கிற்கு இடையிலான அரார் எல்லைக்கடவையை 1990க்கும் பின் வர்த்தகத்திற்காக திறக்க இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஓகஸ்டில் உடன்பாடு எட்டப்பட்டது. 

No comments

Powered by Blogger.