Header Ads



இன்றுமுதல் 25 ஆயிரம் ரூபா, வாகனத் தண்டப்பணம் நடைமுறை

25 ஆயிரம் ரூபா வாகனத்தண்டப்பண சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ளது.

போதையில் வானத்தை செலுத்துதல் காப்புறுதி சான்றிதழ் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்துதல், ரயில் கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்த தணடப்பணம் விதிக்கப்படவுள்ளது.

அதேபோன்று, வயதுகுறைந்த சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதில் ஊக்குவிக்கப்படும் பட்சத்தில் அதற்காக 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளது.

இந்த தண்டப்பண முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Good news for those who earn from drivers...

    ReplyDelete
  2. trafic police officers will stop the cars to check insurance very frequently and the will extra hours without claiming overtime from the government. good news for traffic police.

    ReplyDelete

Powered by Blogger.