Header Ads



வரவுசெலவுத் திட்டம் பற்றிய முஸ்லிம், அரசியல்வாதிகளின் கருத்துக்கள்

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம், நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆவது வரவுசெலவுத்திட்டம், இதேவேளை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவுசெலவுத்திட்டம் குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு தொடர்பில் செய்திகள் வெளியாகி உள்ளன.

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீன்

நாம் எதிர்பார்த்த விடயங்கள் தொடர்பில் வரவுசெலவுத்திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகளாக முன்மொழிவுகள் சில அமைந்துள்ளது. நாடு மேலும் முன்னோக்கி பயணிப்பதற்கு பெரும் வழிகாட்டியாக இது அமைந்துள்ளது.

நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அனைத்து தரப்பிருக்கும் முன்னுரிமை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் வரவுசெலவுத்திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்ககப்பட்டுள்ளளது. நீலப்பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் வரவுசெலவுத்திட்டமாக இது அமைந்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்ககூடிய வகையிலும் இது அமைந்துள்ளது. இது வரவேற்றகத்தக்கது என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

நாட்டிற்குள் புதியதொரு அபிவிருத்தியை ஏற்படுத்தும் விதம் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக உலகிற்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பின் மூலம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தக் கூடிய பின்புலத்தை வரவு செலவுத்திட்ட யோசனைகள் உருவாக்கும் .

2 comments:

  1. Before we submit new budget, it's important to submit last year budget achievements. Other wise it is a budget every year no one doesn't know, had previous budget achieved it targets. And The money been used devolopment.

    ReplyDelete
    Replies
    1. The new budget has to be the continuation of the previous one!

      Other wise no use of introducing new budget!

      Delete

Powered by Blogger.