Header Ads



நாய்கள் காணாமல் போன நிலையில், 10 அடி மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது

நாவ­லப்­பிட்­டி­பொலிஸ் பிரி­வுக்கு உக­பட்ட வெலி­கம்­பொல கிரா­மத்தில் பத்து அடி நீள­முள்ள மலைப்­பாம்மை பிர­தே­ச­வா­சிகள் பிட­டித்­துள்­ளனர் .

மரக்­கறி தோட்ட விவ­சாயி ஒருவர் தனது தோட்­டத்தில் மர­வள்ளி கிழங்கு மரத்­துக்கு நீர் பாய்ச்­சு­வ­தற்கு நேற்றுக் காலை சென்ற போதே மரத்­த­டியில் மலைப்­பாம்பை கண்­டுள்ளார்.

மலை­பாம்பை கண்ட பிர­தேச வாசிகள் முதலில் அச்சம் கொண்ட நிலையில் பின்னர் அதனை பிடித்­துள்­ளனர்.

அண்­மைக்­கா­ல­மாக வளர்ப்பு நாய்கள் காணாமல் போன நிலை­யிலே இந்த மலைப்­பாம்பு பிடிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­தனர். பிடிக்­கப்­பட்ட மலைப்­பாம்பை நல்­ல­தண்ணி வன­வி­லங்கு அதி­கா­ரி­க­ளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.