Header Ads



Schoarship Exam பெறுபேறும், யூத இலுமிநாட்டிகளும்...!!


2050 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி அன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.

அடுத்த நாள் காலை, பத்திரிகை செய்தி

15 குழந்தைகள் தற்கொலை
10 குழந்தைகள் மயங்கி விழுந்து மரணம்
50 குழந்தைகள் மனநல மருத்துவமனையில் சேர்ப்பு.

அன்று ஒரு ஜூம்மாவுடைய பயான், நூரி பரம்பரையை சேர்ந்த ஒருவர் பயான் செய்கிறார். Scholarship Exam என்பது இலுமிநாட்டிகளின் சதி சமூகத்தின் குழந்தைகளை அழிக்க, பைத்தியக்காரர்களாக ஆக்க, இலுமிநாட்டிகளின் கொண்டு வந்தது தான்  இந்த Scholarship Exam என்கிறார்.

இன்னொரு மஸ்ஜிதில்

நுலாரி பரம்பரையை சேர்ந்த ஒருவர் உரையாற்றுகிறார்.

இது யூத நஸாராக்களின் சதி, யூத நஸாராக்கள் எங்கள் பரம்பரையை அழிக்க கொண்டு வந்தது தான்  இந்த Scholarship Exam என உரையாற்றுகிறார்.

இன்றைய சமூகத்தில்கூட அதிகமான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முதன்மையான காரணம் யூத நஸாராக்களோ, இலுமிநாட்டிகளோ அல்ல. இந்த சிக்கல்களுக்கு முதன்மை காரணம் நாங்களேதான்.

எம்மால் சுமக்க முடியாத, எமக்கு பொருத்தமற்றவைகளை எமக்கு மேல் நாமே சுமத்திக்கொண்டு நம்மை நாமே  அழிவின் பாதையில் வழிநடாத்திக்கொண்டு , பலியை எமது கையாளாகாத் தனத்தில் மேல் போடாமல் யூதனதும்,  நஸாராவினதும் இலுமிநாட்களினதும்  மேல் போடுகிறோம்.

Scholarship Exam என்ற  இந்த வீண் சுமையை, அழிவுக்காரணியை இல்லாமல் செய்தவற்கு நம்மால் முடியும்.

நம் எல்லோராலும் முடியும்.

ஆனால் நாம் யாரும் அதனை செய்யமாட்டோம்.

சில வருடங்கள் கழித்து, இது ஒரு புற்று நோயாக மாறி அழிக்கவே முடியாத  ஒரு தீமையாக உருவெடுத்து, அதனால் அழிவுகள் அதிகரிக்கும் போது, அப்போது கூட நாம் திருந்த மாட்டோம்.

யூதனையும், நஸாராவையும் சபித்து  அந்த அழிவுக்குள்ளேயே  வாழப் பழகிவிடுவோம்.

நுணுக்கமாக அணுகினால், ஆராய்ந்தால் புரியும்.

இப்போது கூட தீயாய் எரிந்துகொண்டுடிருக்கும் பல பிரச்சினைகளுக்கு நாம் தான் முதன்மைக் காரணி. யூதனோ நஸாராவே  இலுமிநாட்டியோ அல்ல.

ARM INAS

10 comments:

  1. True 100%.. but our community would not be prepared to accept this and will try point figures at others.

    ReplyDelete
  2. Yes brother it has become the habit of us blaming them for our weaknesses. We Muslims have fallen in to a culture of blaming them to justify our innabilities. We are not ready to learn research and do new scientific invention to bring our standard up.... Rather we do innovation in Deen and earn the anger of Allah too.
    May Allah guide us toward success in both worldly issues and hereafter.

    ReplyDelete
  3. First thing we should close these Madrasas
    These half baked MOULAVIS are creating more problems than the Jews and Christians

    ReplyDelete
  4. First thing we should close these Madrasas
    These half baked MOULAVIS are creating more problems than the Jews and Christians

    ReplyDelete
  5. முட்டாள் தனமான கட்ரை....
    இலகையில் முன்னி பாடலைகளில் 5ம் ஆண்டு புமைப்பரீசில் இல்லை என்பதுதெரியாது பே ாலும்.

    ReplyDelete
  6. I am 100%agree with your statement

    ReplyDelete
  7. 2050 il cut off marks 190

    ReplyDelete
  8. 2050 il cut off marks 190

    ReplyDelete

Powered by Blogger.