Header Ads



சாய்ந்­த­ம­ருதில் பூரண ஹர்த்தால்

தனியான உள்­ளூ­ராட்சிமன்ற கோரிக்­கையை முன்­வைத்து அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சாய்ந்­த­ம­ருதில் இன்­று­முதல் தொட­ராக மூன்று தினங்­க­ளுக்கு பூரண ஹர்த்தால் தீர்மானிக்கப்­பட்­டுள்­ளது. 

சாய்ந்­த­ம­ருது, மாளி­கைக்­காடு ஜும்ஆ பெரிய பள்­ளி­வாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்­பு­களின் ஒன்­றி­யமும் இ­ணைந்து நேற்­று­முன்­தினம் இரவு சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நடத்­திய கூட்­டத்­தின்­போதே இத் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட்­டுள்­ளது. 

சாய்ந்­த­ம­ருது மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­யான தனி­யான  உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்­கை­யா­னது, அனைத்துக் கட்­சி­களின் தலை­மை­க­ளாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு ஏமாற்­றப்­பட்ட நிலையில், அதனை வெற்­றி­கொள்­ளு­மு­க­மாக அர­சுக்கு அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் வண்ணம் சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வா­சலில் அதன் தலைவர் வை.எம்.ஹனிபா தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் பின்­வரும் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

* திங்­கட்­கி­ழமை (இன்று 30) முதல் தொடர்ச்­சி­யாக 3 தினங்­க­ளுக்கு கடை­ய­டைப்பு 
* வயது வந்த அனை­வரும் மூன்று நாட்கள் தொடர்ச்­சி­யாக நோன்பு நோற்று, விஷேட துஆ பிரார்த்­த­னையில் ஈடு­ப­டு­வது
* உள்­ளூ­ராட்சி மன்றம் தொடர்பில் பள்­ளி­வாசல் மேற்­கொண்ட முன்­னெ­டுப்­புகள் தொடர்பில் மக்­களை தெளி­வூட்டும் பொதுக் கூட்­டமும் இடம்­பெற ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அதே­வேளை, சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வாசல் முன்­னெ­டுக்கும் தொடர் போராட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்கும் வகையில் சாய்ந்­த­ம­ருது, மாளி­கைக்­காடு வர்த்­தக சங்­க­மா­னது எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை (30) முதல் தொடர்ச்­சி­யாக 3 தினங்­க­ளுக்கு சாய்ந்­த­ம­ருது, மாளி­கைக்­காடு பகு­தி­யி­லுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற அதன் விஷேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


1 comment:

  1. I am not against getting a separate PS for the town of Sainthamaruthu. Observation of Harthal is not a means to win the demand. It only affects the civilian life badly and the Islamic theologians should resort to spiritual way like fasting and dua. Also I am personally against to Muslim politicians because their only expectation is to become powerful and enjoy the perks. It is history.

    ReplyDelete

Powered by Blogger.