Header Ads



ரோஹிங்கிய சகோதரியின் இந்த, வேதனையை கேளுங்கள்..


அரக்கன் செய்தி ஊடகத்தின் செய்தியாளர் வங்காளத்தில் அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்த ரோஹிங்கிய மக்களிடம் சந்தித்த பிறகு அவர் தந்த தகவலின் படி,

செப்டம்பர் 18 ஆம் நாள், ரோஹிங்கிய அகதிகளில், எல்லையோரத்தில் 15 பேர் மட்டும் கொண்ட குழுவாக தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். அந்தக் குழுவில் 20 வயது மதிப்புமிக்க ரோஹிங்கிய பெண் ஒருவரிடம் பேசிய போது கிடைத்த சம்பவம் அதிர்ச்சியில் செய்தியாளரை ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

செய்தி அளித்தவரின் தனிப்பட்ட நலன் கருதி சல்மா என பெயரிட்டு உள்ளார்கள். 12 அல்லது 13 மியான்மார் இனவாத ராணுவத்தால் சல்மா என்ற பெண்மணி கூட்டுக்கற்பழிப்பிற்கு ஆளாகி உள்ளார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவரையும், அவரின் குழந்தைகளையும் கொலை செய்வதற்கு மியான்மார் இனவாத ராணுவம் தயாராக இருந்தது. இந்த தருணத்தில்,அவர்களிடமிருந்து உயிர் பிழைக்க காலில் விழுந்து யாசித்துள்ளார். மேலும், அவரை கற்பழித்த விடயத்தை யாரிடம் சொல்லமாட்டேன். எங்களை விட்டுவிடுங்கள் நான் வங்காளத்திற்கு தப்பி செல்கின்றோம் என்று கெஞ்சியுள்ளார்.

அவரை கற்பழிப்பதற்கு முன்பு அவர் கண் முன்னால் அவரின் கணவரையும், சகோதரனையும் இனவாத ராணுவம் கொலை செய்துள்ளார்கள். "என் உயிரை உறிஞ்சியதை போன்ற வலியை என் வாழ்வில் இதற்கு முன்பு உணர்ந்தது இல்லை. என் வயிற்றுக்கும் கீழ் உள்ள பகுதியிலும், பிறப்பிருப்பிலும் ரணங்களை இன்னும் உணர்கின்றேன்" என்று பதிவு செய்து இருக்கின்றார்.
மியன்மார் இனவாத ராணுவத்தில் இருந்து தப்பித்த பிறகு, 15 நாட்கள் தனது 12 வயது சகோதரனுடனும், தனது பிள்ளைகளுடனும் காடுகளை நடந்தே கடந்து இருக்கின்றார். வங்காளத்திற்கு தஞ்சம் புகுந்த நான்கு நாட்களில் அவரின் நான்கு வயது மூத்த மகன் இறந்து விட்டார். காடுகளில் நடந்த ரணத்தால் சல்மாவின் கால்கள் வீங்கி விட்டது. வங்காளத்தில் தஞ்சம் புகுந்த பிறகே அவர் உதவிகளை பெற்றுள்ளார்.

மியானமார் இனவாத ராணுவம், ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழும் கிராமங்களுக்கு நுழைந்த பிறகு, ஆண்களையும், பெண்களையும் பிடித்து தூரமாக கடத்திச் சென்று கற்பழிக்கின்றார்கள். அந்த தருணத்தில் அவர் தம் குழந்தைகள் அழுதாலோ அல்லது கத்தினாலோ அந்தக் குழந்தைகளை கொலை செய்கின்றார்கள்.

ரூபினா என்ற பெண் உகியா பகுதியில் அகதிகள் முகாமில் சந்தித்த போது. மியன்மார் இனவாத ராணுவம் கூட்டாக அவரை கற்பழித்ததாக சொன்னார். மேலும் அவர் கர்ப்பிணி பெண் என்று நன்றாக தெரிந்தும் அதனைக் குறித்து எந்த இரக்கமின்றி அவரை கற்பழித்தாக அழுத்தமாக செய்தியை பதிவு செய்தார்.

கிராமத்திற்கு வெளியே ராணுவக்குழுக்கள் இந்த அக்கிரமத்திற்கு துணைபுரிய பாதுகாப்பாக காத்து நிற்கின்றனர்.அகதிகளின் கண்ணீர் கதைகள் இன்னும் முடியாமல் தொடர்வது வேதனை.

-அபூஷேக் முஹம்மத்.

2 comments:

  1. valapuni enda kootu katpalipa ithula eluthurai

    ReplyDelete
  2. Its very painful situation. Can't these people make SUICIDE at this time? Is it allowed In Islam. Very Sad..

    ReplyDelete

Powered by Blogger.