Header Ads



சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தங்கியிருந்தால், அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லையாம்

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் ஏற்காது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் வீசா அனுமதி காலம் முடிந்து அல்லது சட்டரீதியாக தொழில் புரிந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று வேறு இடங்களில் சட்டவிரோதமாக தொழில் புரிந்து வருகின்றனர் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் தொழில் செய்வது அந்நாடுகளில் சட்டத்தை மீறும் செயல் எனவும் அபராதம் அல்லது சிறை தண்டனை பெறக் கூடிய குற்றம் எனவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தொழில் புரிந்து வந்தால் அது குறித்து தமக்கு அறிய தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.