Header Ads



ரோஹின்யர்களுக்கு எதிரான அத்துமீறலின்போது, பொலிஸார் கடமை தவறினார்களா? விசாரணை ஆரம்பம்


மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களை  உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த  அத்து மீறல்கள் மற்றும் தாக்­கு­தல்­களின் போது பொலிஸார் அவற்றை  தடுக்­காமல் கடமை தவறி செயற்­பட்­ட­னரா என்­பதை கண்­ட­றிய விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 

பொலிஸ் தலை­மை­ய­கத்தின் விசேட விசா­ரணைப் பிரிவு (எஸ்.ஐ.யூ.) இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். நேற்று வெலிக்­கடை பொலிஸ் நிலை­யத்தில் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இதே­வேளை  கடந்த செப்­டெம்பர் மாதம் 26 ஆம் திகதி கல்­கிஸை பகு­தியில் இடம்­பெற்ற இந்த அத்துமீறல்­களின் போது பொலிஸார் செயற்­பட்ட விதம் திருப்­தி­யா­ன­தாக இல்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க உள்­ளிட்ட பல தரப்­பி­னரும் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். 

இந் நிலையில்  கல்­கிஸை பொலிஸார் இதன்­போது கடமை தவ­றி­னரா என்­பது குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய பொலிஸ் விஷேட விசா­ரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மெவன் சில்வா தலைமையிலான குழுவினர் விசா ரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

1 comment:

  1. POLICE & POLITICAL DRAMA !. Nothing going to happen.

    ReplyDelete

Powered by Blogger.