Header Ads



தங்காலையில் முகாமிட்டுள்ள மஹிந்த அணி, தேர்தல் வியூகத்தில் மும்முரம், ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு

கூட்டு எதிர்க் கட்­சியின்  தலை­வர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் தங்­கல்­லையில் முகா­மிட்­டுள்­ளனர். இன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வர்­க­ளுக்கும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் முக்­கிய சந்­திப்பு ஒன்றும் இடம்­பெ­ற­வுள்­ளது. 

கூட்டு எதிர்க்கட்­சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களும்   இதில் கலந்து  கொள்ள உள்­ளனர். இந்த சந்­திப்பில் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ, தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச ,  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மாஜன எக்சத் பெர­மு­னவின் தலைவர் தினேஷ் குண­வர்­தன உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்கள்  கலந்­து­கொள்ள உள்­ளனர்.

ஜப்பான் விஜ­யத்தை நிறைவு செய்து  கொண்டு நாடு திரும்­பி­யுள்ள  மஹிந்த ராஜ­பக் ஷ கூட்டு எதிர்க் கட்­சியின் தலை­வர்­களை சந்­தித்து முக்­கிய விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யாட உள்ளார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தற்­போ­தைய அர­சியல் சூழலில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு கடி­ன­மாக நெருக்­க­டி­களை கொடுப்­ப­தற்­கான எதிர்­கால அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து இன்­றைய கலந்­து­ரை­யா­டலில் அவ­தானம் செலுத்­தப்­பட உள்­ளது. 

கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் மீதான தொடர் அடக்­கு­மு­றைகள் மற்றும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் உள்­ளிட்ட அனைத்து இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகை­யி­லான வலு­வான கூட்­டணி அமைத்தல் என்­பன இச் சந்­திப்பில் பேசப்­படும் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது 

அதே போன்று தங்­கல்லை சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்­ட­வர்கள் நாளை திங்கட் கிழமை ஹம்­பாந்­தோட்டை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட உள்­ளனர். . 

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் விடுதலையை வலியுறுத்து நாளை திங்கட் கிழமை ஹம்பாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.