Header Ads



பொதுபல சேனா - முஸ்லிம் தரப்பு பேச்சுவார்த்தையை குழப்ப முயற்சியா..?

பொதுபல சேனாக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞானசாரர் தேரருக்கு தெலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ள 2  முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஞானசாரர் தம்முடனும் பேச வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு பதில் வழங்கியுள்ள ஞானசாரர்,  தாம் முஸ்லிம் அரசியல்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பல்வேறு முஸ்லிம் அமைப்புக்களையும் உள்ளடக்கிய முஸ்லிம் தரப்புடனே பேச்சுவார்த்தை நடத்துகிறேன் எனச்சொல்லியுள்ளார்.

முஸ்லிம் தரப்புடன் நேற்று நடந்த 3 ஆவது சுற்று பேச்சின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இப்பேச்சின் போது குறித்த பேச்சுவார்த்தையை குழப்ப மேற்கொள்ளும் சதிகளுக்கு துணைபோகாது இருதரப்பும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டுமெனவும் பேச்சவார்த்தை குறித்து பரப்பப்படும் போலி வதந்திகள் பற்றி விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. இவர்களே குற்றவாளிகள் இவர்களுக்கு இலங்கை நாட்டு நீதிமன்றத்தில் பல வழக்குகள் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் அனுமதியுடன் கைதுசெய்யப்பட்ட கைதிகள் இவர்களுடன் முஸ்லிம்கள் அவர்களின் உருமைகளை பற்றி அல்லது சட்டதிட்ங்களை பற்றி கதைப்பது மிகவும் தவறு இவர்கள் யார் நாட்டுமக்களின் பார்வையில் பெரும் குற்றவாளிகள் இவர்களுக்கு இஸ்லாம் மார்கத்தைமற்றும் பற்றி விளக்கம் கொடுங்கள் இது அல்லாத வேறுவிடயங்களை இவர்களுடன் கதைக்க எந்த தேவையும் முஸ்லிம்களுக்கு இல்லை.

    ReplyDelete
  2. Jaffna Muslim is giving unnecessary publicity to a confidential matter .

    ReplyDelete
  3. Let us make sure that we insist BBS to invite other organisations such as Sihale, Mahasona, Ravana balaya, etc to this meeting and get their commitment and undertaking under the BBS, not to involve in any trouble makling activities directly or indirectly in future and to resolve future disputes thru negotiations and legal channels.There shall be no place for UNOFFICIAL POLICE.

    ReplyDelete

Powered by Blogger.