Header Ads



ஞானசாரரின் வழக்குகள் வாபஸ், என்ற பேச்சுக்கு இடமேயில்லை - அடித்துச் சொல்லும் ஆசாத் சாலி

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாராவின் வழக்குகள், வாபஸ் பெறப்படுமென்று சில தரப்பினர் போலி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். எனினும் ஒருபோதும் அவ்வாறு ஞானசாராவின் வழக்குகள் வாபஸ் பெறப்பட மாட்டாது என ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது, 

ஆசாத் சாலியாகிய நான், ஒருபோதும் ஞானசாராவின் வழக்குளை வாபஸ் பெறும்படி  சிராஸ்  நூர்தீனை கோரவில்லை. இதனை சிராஸ்  நூர்தீனே அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், நான் ஒருபோதும் ஞானசாரரை காப்பாற்றவோ அல்லது வழக்குகளை வாபஸ் பெறவோ முயலவில்லை என்பதை பொறுப்புடன் இந்த சமூகத்திற்கு சொல்லிவைக்க விரும்கிறேன்.

பொதுபல சேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நம் சமூகத்திலுள்ள சிலர் எதிர்க்கின்றனர். எனினும் இந்த சமூகம் பொதுபல சேனாவுடன் நாம் மேற்கொள்ளும் பேச்சின் பயன்களை நிச்சயம் அனுபவிக்கும். அப்போது எம்மமை விமர்சிப்பவர்கள் வாயடைத்து நிற்பார்கள்.

மேலும் எமது சமூகத்திடம், ஒன்றை தெளிவாக சொல்லவிரும்புகிறேன்.

அதாவது, பொதுபல சேனாவுடன் பேச்சு குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை தயவுசெய்து நம்பாதீகள். நாங்களும் கலிமா சொன்னவர்களே. நாங்கள் எமது சமூகத்திற்கு எந்தப் பாதகமும் நடைபெற அனுமதிக்கமாட்டோம் என்பதே  எமது சமூகத்திற்கான அந்தச்  செய்தியாகும் என்றார்.

No comments

Powered by Blogger.