Header Ads



பாலியல் குற்றம் புரிந்தவனை காப்பற்றவா, ரோஹின்யர்களுக்கு எதிரான போராட்டம்..?

தடுப்பு முகாமில் இருந்த மியன்மார் அகதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வழக்கின் பிரதான சாட்சியாளரை வௌிநாட்டுக்கு அனுப்பும் முயற்சிக்காகவே, கல்கிசை பகுதியில் அகதிகள் துன்புறுத்தப்பட்டதாக, இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவரால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அகதிகள் துன்புறுத்தப்பட்டமை, இனவாத நடவடிக்கை என்பதை விட, பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை மறைக்க, சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மேற்கொண்ட ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர், அடையாள அணி வகுப்பில் சாட்சியாளரால் அடையாளம் காட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், அவரை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கின் பிரதான சாட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர் ஒருவருமாகும். 

இந்த சம்பவத்தின் பின்னர், குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர் குறித்த அகதிகளை பிறிதொரு இடத்திற்கு மாற்ற, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததோடு, ஆகஸ்ட் 8ம் திகதி நீதிமன்றத்தின் அனுமதியும் இதற்காக கிட்டியது. 

இதற்கமைய, குற்றம்சாட்டப்பட்டவர்களால் முடிந்தளவு விரைவில் இந்த அகதிகளை இலங்கையை விட்டு வௌியேற்ற முயற்சிக்கப்படுவதாக, கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். 

4 comments:

  1. பிக்குமாருக்கும் அவர் சொந்தமா ஐயா.

    ReplyDelete
  2. This may be true as the senior police officers were just looking at the protesters without carrying out their duty. Shame on these police officers and men in robes..

    ReplyDelete
  3. இவர்களி ஓட்டை சட்டத்தால் என்தான் கிழிக்கமுடியும்...

    ReplyDelete
  4. What ever this has exposed Sri Lanka situation to the world.



    ReplyDelete

Powered by Blogger.