October 05, 2017

வடக்கு - கிழக்கு இணைப்பில், மெத்­தனப் போக்கு அவசியம் - ஹக்கீம்

-வீரகேசரி பத்திரிகை-

வட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது நீண்­ட­கால கொள்கை ரீதி­யான தீர்­மா­னத்தில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­து­மில்லை. இந்த விட­யத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக முடி­வெ­டுக்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது. நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள், விட்டுக் கொடுப்­புகள் இடம்­பெற வேண்­டு­மென்­பதே எமது நிலைப்­பா­டாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண்டும். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். அது தொடர்பில் கலந்­து­ரை­யாட முஸ்லிம் சகோ­தர்­க­ளுக்கு அழைப்பு விடு­கின்றோம். அதே­வே­ளையில் இணைந்த வடக்கு கிழக்­கிற்கு படித்த பக்­கு­வ­மான முஸ்லிம் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக்­கு­வதை எதிர்க்­கப்­போ­வ­தில்லை என எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் மன்­னாரில் தெரி­வித்திருந்தார்.

அதே­நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி தலை­வர்­களுள் ஒரு­வரும் விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.ஹரீஸ், வடக்கு கிழக்கு இணைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருந்தார். குறிப்­பாக வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் சுதந்­தி­ரக்­கட்சி, மற்றும் கூட்டு எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாடு நம்­பிக்­கை­யான  ஒளிக்­கீற்கு என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்தக் கருத்­துக்கள் தொடர்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீமிடம் வினவியபோதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், 

வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கா­ல­மாக பேச­ப்­ப­டு­கின்ற விட­ய­மாகும். இது இரண்டு சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். இந்த விட­யத்தில் எமது கட்சி நீண்­ட­கா­ல­மாக ஒரு நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருக்­கின்­றது.

குறிப்­பாக எமது மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யா­ன­தொரு அலகு அமை­ய­வேண்டும் என்று கொள்­கை­ய­ள­வி­லான முடி­வொன்றை எடுத்­தி­ருந்தார்.

இந்த தீர்­மா­னத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தற்­போது வரையில் வில­க­வில்லை. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக நாம் தமிழ் சகோ­தர்­களின் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். நடத்­திக்­கொண்டும் இருக்­கின்றோம். மேலும் நிபந்­த­னை­க­ளு­ட­னான நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களும் அவ­சி­ய­மா­கின்­றன.

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் தொடர்பில் ஒரு வகை மெத்­தனப் போக்­கையே கடை­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது. வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக பதி­ல­ளித்து விட­மு­டி­யாது. இதற்கு கார­ணங்கள் உள்­ளன. 1987ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவர் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்டு மாகாண சபை முறை­மைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. 


இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டன. ஒரு­வ­ரு­டத்­திற்குள் கிழக்கு மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு நீடிப்­பதா? இல்­லையா? என்­பது தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கூறப்­பட்­டது. ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­து­வதன் ஊடாக இரண்டு சகோ­தர சமு­கங்­க­ளுக்கு இடையில் விப­ரீதம் ஏற்­ப­டுத்த அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தலை­மை­யி­லான அர­சாங்கம் முயன்­றது. ஆனால் அத்­த­கைய நிலை­மைகள் எல்லாம் தெய்­வா­தீ­ன­மாக கடந்து போயின. 

தற்­போ­தைய நிலையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகையில் தனி அலகு அமை­யப்­பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதற்­காக நீண்ட பேச்­சு­வார்த்­தைகள், நிபந்­த­னை­யு­ட­னான முன்­னெ­டுப்­புகள், விட்டுக் கொடுப்­புகள் என பல விட­யங்கள் இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளன. 

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது. அது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு இவ்­வாறு ஒரே நிரையில் பதி­ல­ளிப்­பது அவர்­களின் நிகழ்ச்­சிக்கு தூப­மி­டு­வ­தா­கவே அமையும்.தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டையில் எந்­த­வி­த­மான நல்­லு­றவும் பேணப்­படக் கூடாது என்ற போக்­கையே இத்­த­கையோர் கொண்­டுள்­ளனர். இது பிழை­யான அணு­கு­மு­றை­யாகும். 

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் பாரா­ளு­மன்­றத்­தி­னூ­டா­கவே அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க இரு மாகா­ணங்­களும் அங்­கீ­காரம் வழங்­கி­னாலும் அது சாத்­தி­ய­மா­காது. இவ்­வா­றான சில காப்­பீ­டு­களும்  இருக்கும் நிலை­யிலே இந்த விட­யங்­களை சில தரப்­பினர் பெரி­து­ப­டுத்தி ஊதிப்­பெ­ரி­தாக்கி ஏதோ விப­ரீதம் நடந்­துது போல காட்டி  அர­சியல் பிழைப்பு நடத்­து­கின்­றனர். 

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவ­ச­ரப்­பட்டு பேசு­வது அர­சியல் பிழைப்­பு­வாத பேச்­சுக்கள் மட்­டுமேயாகும். ஒரே இரவில் அல்­லது நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்­து­வி­டு­வ­தைப்­போன்று பேசு­கின்­றனர். முஸ்­லிங்­களின் உடன்­பா­டின்றி இதனை செய்ய முடி­யாது. செய்­யவும் மாட்டோம் என சம்­பந்­தனே கூறி­யி­ருக்­கிறார். வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்க்க வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அடுத்தபடியாகவே இவ்விடயம் தொடர்பில் ஆராய முடியும். 

8 கருத்துரைகள்:

ஹக்கீம் அவர்கள் முஸ்லீம் சமூகத்துக்கு இதுவரை எதனையும் சாதிக்காமல் விட்டுக்கொடுப்பை மட்டுமே பேசி வருகின்றார் .தமிழ் தங்கள் காணி விடயத்தில் எவ்வளோ சாதித்து விட்டார்கள் .ஆனால் ஹக்கீம் அவர்கள் முஸ்லீம் சமூகத்தின் காணிகளை விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றார் .இறுதியாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லீம் சமூகத்தின் அணைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுக்கும் வரை இவருடைய முயட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் .இதனால் எமது முஸ்லீம் சமூகம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் .

ஹக்கிம் ஐயா.தூரநோக்கு கொண்ட தலைவர் அவரின் நிலைப்பாடு முஸ்லீம்களுக்கு நன்மையே.

வடகிழக்கு மாகாணங்கள் இணையும்போது முஸ்லிம்களுக்கு தனயலகு உருவாக்கப்பட வேண்டும். இது மிஸ்டர் ஹகீம் அவர்களின் கூற்று. ஹகீம் அவர்களை இதற்கான திட்டத்தை உங்களால் காட்ட முடியுமா. எவ்வாறு அலகுகள் பிரிக்கப்பட வேண்டும் எல்லைகள் எப்படி...இந்த விடயத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத்தான் முடிவு எடுக்க வேண்டும். வடகிழக்கு பிரச்சினையில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையோ அல்லது அருகதையோ இல்லை. நீங்கள் என்ன கிழக்கில் பிறந்தீர்களா அல்லது வடக்கில் வளரந்தீர்களா. வடகிழக்கு மக்களுக்கு அல்லவா தெரியும் தமிழன் அடித்த அடியும், பட்ட கஷ்டமும், இழப்புகளும். இத்தனை வருடம் கடந்தும் வடக்கு அகதிகள் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பை கதைக்க கிழம்பி விட்டார். ஏன் ரோஹிங்கியர்களைப் போல் கிழக்கு மக்களையும் பார்ப்பதற்கு மிகவும் ஆசை போலும். இணைப்பைப் விடயமாக நீண்ட கலந்துரையாடல்கள் நடப்பதற்கும், விட்டுக் கொடுப்பதரற்கும் இது என்ன குடும்ப பிரச்சினையா. இன்னுமா உட்கார்ந்து தமிழர்களுடன் பேச சொல்கின்றீர்கள். இன்னும் எதைக் கொடுக்கச் சொல்கின்றீர்கள். பொண்டாட்டி பிள்ளைகளைத்தான் கொடுக்க வேண்டும். உங்கள் கட்சியும், நீங்களும் முஸ்லிம் சமூகத்தையே காட்டிக் கொடுத்து, முஸ்லிம்களின் வாக்குகளை பிச்சை எடுத்து இன்று சுகம் அனுபவிக்கின்றீர்கள். சம்பந்தன் ஐயா அவர்களை உங்களின் "படித்த பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை எதிர்க்கப்போவதில்லை" என்ற கருத்து 2017 ஆம் ஆண்டின் சிறந்த ஜோக்காக கருதலாம். ஐயா அவர்களே, இப்படி நீங்கள் கூறியது போன்று ஒரு பிரதேச சபை உருப்பினர் கூட இல்லாததால் தான முஸ்லிம் சமூகம் இன்று இப்படி தத்தளிக்கின்றது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அயோக்கியன்கள் தானே முஸ்லிம் சமூகத்தை ஆட்சி செய்கின்றார்கள். ஐயா அவர்களே வடகிழக்கை இணைக்காமல் இவ்வாறு பிரிந்து இருப்பதால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்சினை என்று கூற முடியுமா. ஐயா அவர்களே, உங்களையோ தமிழ்த்தலைவர்களையோ ஒரு போதும் நம்ப முடியாது. அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. முஸ்லிம்களுக்கு தமிழர்கள் செய்த அநியாயங்களின் காயத்தின் வடுக்கள் இன்னும் ஆறவி்ல்லை. எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தது போன்று வடகிழக்கு இணைப்பையும் வடகிழக்கு முஸ்லிம்கள் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என நினைக்காதீர்கள். ஐயாவினகதும், தமிழ்த்தலைவர்களினதும் தற்போதைய நோக்கம் வட கிழக்கு இணைப்பு, சில ஆண்டுகளின் பின் ஈழம். ஈழத்தினதம், இலங்கையினதும் எல்லையில் ரோஹிங்கியர்கள் போன்று வடகிழக்கு முஸ்லிம்கள். மிகவும் அழகான, நிதானமான திட்டம். இந்த நிலைமைக்கு இட்டுச் செல்லும் வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கும் அளவிற்கா மடையர்கள் வடகிழக்கு முஸ்லிம்கள். ஹகீம் அவர்களே இணைப்பு விடயமாக நீண்ட காலம் பேசப்பட்டால் என்ன குறிகிய காலம் பேசப்பட்டால் என்ன அல்லது உங்களின் கட்சி நீண்ட கால நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் எங்களுக்கு என்ன. அனைத்தையும் உங்களின் இனவாதக் கட்சியோடு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்சியின் கருத்து வடகிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடும் அல்ல நீங்கள் எங்கள் பிரதிநிதிகளும் அல்ல. வாக்கும் பிச்சையில் வாழும் அயோக்கியன்களே. அஷ்ரப் அவர்களின் கருத்தும் நிலைப்பாடும் அவரின் மரனத்தோடு போய் விட்டது. அவரின் நிலைப்பாட்டை முஸ்லிம்களுக்கு சொல்வதற்கு, நீங்களும், உங்கள் கட்சியும் அஷ்ரபின் கொள்கைகளை தவறாமலா பின்பற்றுகின்றீர்கள். ஒட்டு மொத்தமாக இந்த செய்தியில் உள்ள உங்களின் கருத்தும், கதைகளும் மடையனுக்கும், முட்டாளுக்கும், பைத்தியகாரனுக்கும், கடந்த மாதம் பிறந்த குழந்தைக்கும் சொல்வது போல் உள்ளது. உங்களின் இந்தக் கருத்துக்கழையும், இந்த செய்தியையும் பார்த்துக் கொண்டிருக்க வடகிழக்கு முஸ்லிம்கள் ஒன்று அயோக்கியன்களும் அல்ல முட்டாள்களும் அல்ல. வடகிழக்கு இணைப்பு என்பது எத்தனை மகா பெரிய விடயம். வடகிழக்கு மண்ணில் வாழவிருக்கும் எமது சந்ததிகள் உலக அழிவு வரை சந்திக்கப்போகும் மிகப்பெரிய விடயம். எத்தனை விவாதங்களும், கருத்துக்களும் இடம்பெற வேண்டிய விடயம். இவர் ஏதோ அவர் வீட்டு குசினிப் பிரச்சினை போன்று பேசிவிட்டும் போகின்றார். தனி அலகு..தனி அலகு என்றுதான் கூறுகின்றாரே தவிர அதன் நிபந்தனைகள் எவ்வாறு இருக்கும், சிறுபான்மையாக குக்கிராமங்களில் வாழுபவர்களின் நிலைமை என்ன, முஸ்லிம் சமூகம் இதனால் என்ன நன்மைகளைப் பெறும், இந்த இணைப்பானது தனிநாட்டிற்கு வழிவகுக்காதா என எத்தனை விடயங்களை இவரும் இவரின் கட்சியும் முன்வைக்க வேண்டி உள்ளது. இதை எல்லாம் விட்டு விட்டு தனி அலகு தனி அலகு என சிறு பிள்ளைத்தனமாக கத்திக்கொண்டிருக்கின்றார். ஷைத்தானைக் கூட நம்பலாம் ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்புவதை விட ஷொப்பிங் பேக்கை கட்டிக் கொண்டு கடலிலே குதிக்கலாம்.

This comment has been removed by the author.

தனியலகு என்றால் காத்தான் குடி மூதூர் தோப்பூர் கல்மூனை குடி. சாய்ந்தமருது சம்பான்துறை பொத்துவில்தெற்க்கு ,ஏறாவூர் அட்டாளைச்சேனை .தோப்பூர்.புல்மேட்டை.மருதமுனை.இக்காமம்.தம்பலகாமம் தெற்க்கு. கிண்ணியா. இவைதானே வேறு என்ன.??

SUPER REPLY "IRANDAM KURUKKU THERU!!
you have very clearly told that i wanted to say!!!

RAUF HAKEEM IS THE REAL ENEMY OF SRI LANKAN, PARTICULARLY NORTH & EAST MUSLIMS! HE IS NO.1. HYPOCRISY!! BIG CHEATER! DAYTIME ROBBER!!

He cannot be trusted to handle SL. Muslim affairs, Based on the past and what he has been doing since came to the seen of SLMC.

Post a Comment