Header Ads



முஸ்லிம் பிர­தி­நி­திகள், குழப்­பக் கூடாது - டிலான்

தமது அர­சியல் தீர்வுப் பய­ணத்தில்  பெரும் இழப்­புக்­களை சந்­தித்து வந்­துள்ள தமிழ் மக்கள் இன்று  ஏக்­கிய மற்றும்  ஒரு­மித்த நாடு என்ற முறையின் கீழ்  அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முன்­வந்­துள்­ளமை பாரிய திருப்­பு­மு­னை­யாகும். எனவே அந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண முடி­யா­விடின் இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு­போதும்  தீர்வைக் காண­மு­டி­யாது. தமிழ் மக்கள் இத­னை­விட கீழே இறங்கி வரு­வார்கள் என நாம் ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும்,  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான   டிலான் பெரேரா தெரி­வித்தார். 

எனினும் இந்த ஏக்­கிய மற்றும் ஒரு­மித்த என்ற விட­யங்­களை வைத்­துக்­கொண்டு  தெற்கில் விமல் வீர­வன்ச, தினேஷ் குண­வர்த்த உள்­ளிட்­ட­வர்­களும் வடக்கில் விக்­கி­னேஸ்­வரன்,   சிவா­ஜி­லிங்கம்  உள்­ளிட்­ட­வர்­களும்  இன­வாத ரீதியில் செயற்­பட்டு வரு­கின்­றனர்.  அவர்­களின் இன­வாத செயற்­பாட்டை  தோற்­க­டிக்க அனை­வரும் முன்­வ­ர­வேண்டும் என்றும்  டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார். 

இதே­வேளை தற்­போ­தைய இந்த தீர்க்­க­மான இந்த சூழலில் முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­திகள் இதனை குழப்­பி­வி­டாமல்  ஒரு நிரந்­தர தீர்வைக் காண   ஒத்­து­ழைப்பை வழங்­கு­வார்கள் என நம்­பு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். 


5 comments:


  1. பொறாமையை விட்டு முஸ்லீம்கள் தமிழருன் இணைந்து கருமாற்ற வேண்டும்.
    முஸ்லீம் மக்கள் உளரீதியான போராட்டத்தில் உள்ளனர்.இதுவரை முஸ்லீம் அரசியல் வெற்றி என்றும் தமிழர் அரசியல் தோற்ற அரசியல் என்றும் தீர்வு சாத்தீயமீல்லை என்றும் எண்ணியவர்கள் இப்போது அதிர்சியில் உள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. தமிழருடன் இணைந்து கருமாற்றவா சொல்கிறீர். கையில் பலமிருந்த கெம்மையி தமிழர் செய்த கறுமத்தால்தான் இப்போது தமிழருக்கிந்த 2ம் கெட்டான் நிலை...

      Delete
    2. இம்ரான் கூட்டுமொத்த தமிழர்களையும் குறைகாணவேண்டாம். இஸ்லாமிய விழுமியங்களிலிருந்து தடம்புறழவும் வேண்டாம்.

      Delete
    3. இவர் எழுதியுள்ள கருத்திற்கே பதிலளித்துள்ளேன், அது எழுத்துப்பிளையா, அவரின் மனதிலிருந்தே வந்ததாஎன தெரியவில்லை. நான் அனேக தமிழர்களுடன் பழகுகிறேன். இவர்(போல் சிலர்) விஷத்தையே கக்குகிறார். ஆனால் அவர்கள் அவ்வாறில்லை. இப்பதில் இவர் சார்பானோருக்கு மாத்திரமே. அனைத்து தமிழருக்குமல்ல. லாபீர்

      Delete
  2. We remember the past...it is not easy to forget.... so it is upon us to trust a group as We Muslim cannot fall into the same pit 2nd time. When 200000 thousand Muslims were driven out from their own land within 48 hours.. where was your humanity? Even till today you oppose the Muslims returning to their own houses in north.. How will Muslim trust your leaders? 1st you said we all speak same language And once the benefits are earn you say this benefits are only for Tamils.how come u expect us to trust your leaders?

    First build your trust by giving the rights of Muslims to get back to their lands and houses safely. If done justice we Muslims will trust your leaders and can agree with.

    ReplyDelete

Powered by Blogger.