October 10, 2017

தமிழ் தலைவர்களை நோக்கி, ஒரு முஸ்லிம் வைத்தியரின் கேள்வி


-Dr.Yoosuff-

சிங்கள, முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு சமனான உரிமைகள், அந்தஸ்துக்கள் கிடைக்க வேண்டும் என்று வரிக்கு வரி கூறும் தலைமைகளே! இணைந்த வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் அதனுள் ஒரு தனியலகு முஸ்லிம் மக்களுக்கும் என்பது சமஉரிமையா? தமிழ் தலைவர்களுக்கு கணக்குப்பாடம் புரியாத புதிரா?

வடகிழக்கில் யுத்த காலங்களில் 3000 ற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை குறிப்பாக பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களை கொன்றொழித்தமைக்கு  ஒரு பகிரங்க மன்னிப்புக்கூட கோர விரும்பாத தமிழ் தலைவர்கள், முஸ்லிம்களை சமத்துவமாக நடத்துவீர்கள் என்று நம்பச்சொல்கிறீர்களா?

யுத்தகாலத்தில் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீளக்கையளிக்க விரும்பாத தமிழ் தலைவர்கள், வடகிழக்கு இணைந்து அதிகாரம் உங்கள் கைகளுக்கு கிடைத்தபின் எஞ்சி இருப்பதையும் பறித்தெடுக்கமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் தலைவர்களே? 

100% முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள தரவைக்கோயில் எனும் வீதியை கடற்கரை பள்ளி வீதி என பெயர் மாற்றுவதை அனுமதிக்காத தமிழ் தலைமைகள் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்குரிய உரிமைகளை வழங்குவீர்கள் என்று நம்பச் சொல்கிறீர்களா? 

35% ஆக வாழும் தமிழ் மக்கள் 65% ஆக வாழும் முஸ்லிம் மக்களுடன் கல்முனை பிரதேச செயலகப்பிரிவில் இணைந்து செயல்பட விரும்பாமல் பிரித்துக் கேட்டு போராடும் தமிழ் தலைவர்களா வடக்குடன் இணைந்து வாழ முஸ்லிம்களை கேட்கிறீர்கள்? 

வரலாற்றில் எப்போதாவது வடகிழக்கு இணைந்திருந்த வரலாறு உண்டா? அப்போ ஏன் இப்பமட்டும் அடம்பிடிக்கிறீர்கள்?

எங்கள் வரலாற்று நிலம் கிழக்கு என்று நீங்கள் கதையளந்தால் முஸ்லிம்களின் நிலம் எங்கே உள்ளது என்று கூற முஸ்லிம்களுக்கு தெரியாதா? கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் விரும்பினால் அவர்களின் நிலங்களை வடக்குடன் இணைக்கலாம். முஸ்லிம்களின் நிலங்களை இணைக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கிழக்கைச் சேராத சில்லறைக்கு விலைபோகும் தலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனாவது தலையாட்டினால் அதனை உண்மை என்று ஏற்றுக் கொள்ளுமளவிற்குத்தான் உங்கள் அறிவு வேலை செய்யுமா?  

கிழக்கில் முதற்பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களை  அவர்களின் விருப்பம் இல்லாமல் இணைப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்பது கூட தெரியாத சட்ட வல்லுநர்களா தமிழ் தலைவர்கள்? 

வெளியே சமாந்தரம், சமத்துவம். உள்ளே கோணம். இதுதானே உங்ஙள் தத்துவம்?

முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழவேண்டியது யார் விரும்பியோ விரும்பாமலோ காலத்தின் தேவையாக மாறியுள்ளது. இதனை புரிந்து கொண்டு காயப்பட்ட உள்ளங்கள் ஒன்றுபட்டு இரு சமூகங்களின் வாழ்வும் செப்பனிடப்பட வழிவகை செய்யுங்கள் தமிழ் தலைவர்களே.    

முஸ்லிம்களுக்கு போராடத் தெரியாது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். தெரியும். ஆனால் எங்கள் புனித இஸ்லாம் எங்களுக்கு சரியான வழியை காட்டியிருக்கிறது.

நாங்கள் ஏனைய சமூகங்களை வாழவைக்கும் சமூகம். விட்டுக்கொடுப்பு செய்து அன்பையும் பண்பையும் சமாதானத்தையும் வளர்க்கும் சமூகம். வாழவிட்டு வாழாவட்டியாக இருக்கும் சமூகம் என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள், தமிழ் தலைவர்களே. இரு சமூகமும் ஒற்றுமையாக வாழ ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் எனக்கூறி முடிக்கிறேன் 

13 கருத்துரைகள்:

MasaAllah, well written.
Sonna vidayangal Tamil Talaivargalukku therivathatku mun, engada Pachchonthi, selfish and only want to be the life time cabinet minister at the cost of Muslim influence/scarification, but have done nothing for the Muslim community in SL compared to those dedicated and real leaders like Mr. Badiuddin Mohd, Mr. Ashraf, Mr. Mansoor, Mr. Hisbullah, Mr. Rasad, even Mr. Athaullah, THERIUMA ? This traitor should be removed, InsAllah, that day will not be very far !

இவையாவும் கற்பனைவாதம்
😁முஸ்லீம்களின் 1000ஏக்கர் எங்கு பிடிக்கப்பட்டது.
😁ஜீகாத்திகள் செய்த ஆழிப்புக்கு யார் பதில் கூறுவது.
😁முஸ்லீம்கள் அதிகார அலகு கேட்ககூடாதென்று யார் கூறியது??அதை கோரூம் முது கெலும்பு உங்கள் தலைமைகளிடம் இல்லை அதற்காக எம்மிடம் வீராப்பு காட்டாதீர்
😁கிழக்கில் 40%தமிழர் வாழுகையில் முஸ்லீம் பெரும்பான்மை என்று கூறுவது யாரை ஏமாற்ற??

இனவாத கட்டுரை.

இனவாதிக்கு எல்லாம் இனவாதம்தான்.

உண்னை போன்ற இனவெறியர்களுக்கு இன்னொரு ராஜபக்சே தான் சரி. இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் ஒடித்து மூலையில் போட.

Hon. Sumanthiran MP/TNA,
I know you very well and what type of a selfish politician you are. I remember you getting benefits from Mahinda Rajapaksa during his regime for your personal gains. You are "NOT" a "PEOPLES ELECTED" parliament representative of the TAMILS to say what you are telling. DO NOT TRY TO FORCE YOUR WAY TO MERGE THE NORTH AND EAST SUMANDIRAN and threaten the Muslims of the East. LEAVE THE EASTERN PROVINCE ALONE, SUMANDRIAN. Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppression, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA or the “OPPORTUNITIC” statements of RAUF HAKEEM, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

Kevalam karaithivil maligaikaddukkul erukkum kaani valavugalai muslimgalukku virkka goodathu enrru solli virtha kaniyai ģooda kovilal thiruppi eduththa tamilanda neengal naanga ungalai nampanum??,,?? Kevalama ellaya?????????

Who started terrorism first?

தொழுகையில் முதுகில் குத்திய வீரம் கெட்ட தமிழன்!

அருமையான பதிவு அணைவருக்கும் இத கொண்டுசெல்ல வேண்டும்

Post a Comment