October 19, 2017

புத்தளம்வாழ் வெளியேற்றப்பட்ட யாழ் - கிளிநொச்சி சிவில் சம்மேளம் - ஐ.நா.சபையின் விசேட பப்லோ டீ கிரீப் சந்திப்பு.

வடக்கு முஸ்லீம்களின்  ஒன்றியம் அனுசரனையுடன் புத்தளம், தில்லையாடி, ஆர். டீ. எப். வளாகத்தில் விஷேட நிபுணர் பப்லோ டீ கிரீபுடன் சந்திப்பு  நடைபெற்றது .இதில்  புத்தளம் வாழ் வெளியேற்றப்பட்ட யாழ், கிளிநொச்சி சிவில் சம்மேளனம் சார்பாக தலைவர்   மெளலவி அப்துல் மலிக் செயலாளர் ஹஸன் பைறூஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். 

பின்வரும் விடயங்கள் அடங்கிய மகஜரும் கையளிப்பு.

1)வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸலிம்களுக்கான விஷேடஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கவேண்டியதுடன் அவசியத்தையும் இதன்மூலமே  உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தமுடியும் எனவழியுறுத்தபபட்டது.

2) திட்டமான மீள்குடியேற்றக்கொள்கை உருவாக்கப்பட்டு. மதீப்பீடுகள்  கணக்கெடுப்புக்கள். நஷ்ட ஈடுகள் கணக்ககெடுக்ப்பட வேண்டியதுடன் ஒரு பொறிமுறையின் அடிப்படையில் மீள்குடியற்றம் கட்டம்கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென வழியுறுத்தப்பட்டது. 

3)மீள்குடியேற்றம் செய்யப்படாமல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் பாதகநிலையும் சனத்தொகைக்கு ஏற்ப பிரிக்கப்படாமை, நிலப்பரபிற்கு ஏற்ப  பிரிபடாமை, முறையற்ற இணைப்பு என்பன சுட்டிக்காட்டப்பட்டது

 4)தேர்தல் முறைமாற்றம், அதிகாரப்பகிர்வு, ஆட்சிமுறைமாற்றம் போன்றவற்றில் சிறுபான்மைச்சமூகமான முஸ்லீம்களுக்கு ஏற்படும் பாதகமான நிலையும்  இது சீராக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்படவேண்டிய நிலையையும் சுட்டிக்காட்டப்பட்டது. இச்செயற்பாடு முன்னெடுக்கப்படாத விடயம் சுட்டிக்காட்ட்ப்பட்டது.

.5) சீர்திருத்தம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டிய நடைமுறைக்கு மாற்றமாக மாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் இதற்கு உண்மைத்தன்மையாக தேர்தல் தொகுதி பிரிக்கப்படவில்லை , அதற்கான எல்லைகள் பிரிக்கப்படல் வேணடும்,உறுப்பினர்கள் தீர்மானிக்கப்படல் வேணடும், எல்லை நிர்ணயித்தல் முறையில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும் இவையாவும் இன்னும் செய்படாமையும் மீள்குடி இடர்களின் நிலையும்.

 6 )
பூர்வீகாணி சுவீகரிப்பும் வர்த்தமானி அறிவிப்பும், எம்மவர்களின் காணிகளை பிறருக்கு வழங்கப்படிருக்கும் நிலையும்,வழக்கில் காலதாமதம் பணம்வீண்விரயமாதல், இருபத்தாறு வருடமாக எம்மவருக்கு அரசகாணி வழங்கப்படாமை, எம்வர்களின் காடகியுள்ளகாணியை துப்பரவுசெய்யும்போது அபாண்டமாக குற்றச்சாட்டுக்கள் . 

 7)அரச அதிகாரிகள் இனவாத நடவடிக்கையும். புறக்கணிப்பும,


 8) வடமாகாண சபை முஸ்லீம்களின் விடயத்தில்  பாரபட்சமும் அக்கறையின்மையும்  புறக்கணிப்பும்செய்து வரும்நிலை.  
 9 )தழிழ் அரசியல்வாதிகள் கடும்போக்கு இனவாத செயற்பாடுகளும் முட்டுக்கட்டைகளும். 

 10)அரச காணிகளை எம்மவர்களுக்கு  வழங்களில் இழுத்தடிப்பும் புறக்கணிப்பும்.

.11) தென்பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய கடும்போக்கு வாதப்பிரச்சாரங்களும் திட்டமிட்ட சொத்து இழப்புக்கள் தொடரும் அவலங்களும்.

 12) நீதியின் பிடியில் இனவாத கடும்போக்காளர்கள் ஏற்பாட்டாளர்கள் தண்டனை பெறாமல் இருந்துவரும் அவலநிலையான  யதார்த்தசூழ்நிலைமைகள்.

 13) குறிப்பாக மீள்குடியற்றத்தின் யதார்த்த நிலையும் அரச அதிகாரிகளின் இழுத்தடிப்புக்கள், புறக்கணிப்புக்கள, ஓரங்கட்டப்பட்டு இல்லாமல்செய்துவரும் நிலைமைகளும் தெளிவுபடுத்தப்பட்டன.

 இனி வரும்காலத்தில் புத்தளத்திற்கும் உயரதிகாரிகளின் வருகை அவசியத்தேவையையும் உணர்த்தப்பட்டது.இவையாவும் அடங்களான ஆவணம் எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட்டன.எமது புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி சிவில சம்மேளத்தினால் .மேலும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கருத்துக்களும், புத்தள மக்களின் இழந்த இழப்புக்களும் எதிர்கொண்ட பிரச்சினைகளும் இவர்களது  நிலைமைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அவசியத்தையும் அரசாங்கம்  திட்டமிட்ட பொாறிமுறையன் பிரகாரம் மீள்குடியேற்றப்பட வேண்டியும் வாக்காளர் பதிவுகளில் வடக்கு முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் இதன் இழப்புக்களையும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் புத்தளத்திற்கும் வரும் பிரதிநிதிகள் வருகை தரவேண்டியஅவசியத்தையும் எடுத்து வலியுறுத்தப்பட்டது. மேலும் எழுத்துமூல ஆவணத்தை வடக்கு முஸ்லீம்களின் ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. முக்கியமான கருத்துக்கள பரிமாற்றங்கள் இச்சந்திப்பின்போது இடம்பெற்றது முக்கிய அம்சமாகும்.

        (கரீம் ஏ. மிஸ்காத்)

0 கருத்துரைகள்:

Post a Comment