Header Ads



"சிறியளவில் கொள்ளையடிக்க வேண்டாம், பாரியளவில் கொள்ளையடியுங்கள்"

மோசடியாளர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 19ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் மேன்முறையீடு செய்து வழக்கு விசாரிக்கப்பட்டு வீட்டுக்கு வந்து விட்டனர்.

சாதாரண மக்கள் பிணை பெற முடியாது வருடக்கணக்கில் சிறையில் இருக்கின்றனர்.

நாமல் ராஜபக்சவின் செயலாளர் எனக் கூறிய பெண்ணைக் கைது செய்ய சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கைது செய்தார்கள், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். பிணை வழங்கப்பட்டது.

சிரிலிய சவிய கொள்ளை குறித்து எந்த பேச்சும் இல்லை. இதன் மூலம் கொள்ளையடிப்பது என்றால் சிறியளவில் கொள்ளையடிக்க வேண்டாம் பாரியளவில் கொள்ளையடியுங்கள் என்ற செய்தியையே கூறுகின்றனர் என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.