Header Ads



ரோஹின்யா முஸ்லிம்களை தாக்கிய, மேலும் சிலர் கைது செய்யப்படுவர் - பூஜித்

கல்கிஸையில் றோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் கலகம் விளைவித்த சம்பவம் தொடர்பில், மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளனரென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுள் 6 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்கிஸையில் இடம்பெற்ற குறித்த சம்பவமானது, முழுக்க முழுக்க சட்டவிரோதமானது எனவும், இந்தச் சம்பவம், தனிப்பட்ட தேவைகளுக்காகவே நடத்தப்பட்டது எனவும், பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை, றோகிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக கல்கிஸையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம், கலகம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவசரக்கூட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சிறைச்சாலைகள் அமைச்சர், நீதியமைச்சர் ஆகியோருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளூர் பிரதிநிதியும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.