Header Ads



பாராளுமன்றத்தின் மீது குண்டு வீச வேண்டும் என, விமல் வீரவங்ச கூறியமை ஆச்சரியத்திற்குரியதல்ல.

விமல் வீரவங்ச, மக்கள் விடுதலை முன்னணியின் இருந்த புனர்வாழ்வு பயிற்சி நபர் என்பது அவரது பேச்சின் மூலம் வெளிப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மீது குண்டு வீச வேண்டும் என விமல் வீரவங்ச அண்மையில் கூறியிருந்தமை குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட நபர் என்ற வகையில் விமல் வீரவங்ச இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல.

இவர்களே இவ்வாறு செயற்படும் போது வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டு சிறையில் இருக்கும் நபர்கள் எப்படி புனர்வாழ்வு பயிற்சிகளை பெற முடியும் எனவும் இசுரு தேவப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.