Header Ads



"குர்ஆன் அவமதிப்பு" சமரசத்திற்கு ஞானசார முயற்சி, சிராஸ் நூர்தீன் மறுப்பு


-AAM. Anzir-

புனித அல்குஆர்ன் அவமதிப்பு தொடர்பிணான ஞானசாருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு இன்று வியாழக்கிழமை, 19 ஆம் திகதி கோட்டை நீதிமன்ற நீதிபதி லங்கா ஐயரத்தினா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குற்றவாளிக் கூண்டில் ஞானசாரர் நின்றுள்ளார்.

அந்தசமயம் ஞானசாரரின் சட்டத்தரணி  இந்த வழக்கை சமரசத்துடன் முடித்துக்கொள்ள, தமது தரப்பு முயலுவதாக நீதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது குறுக்கிட்டுள்ள மூத்த  முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், புனித குர்ஆன் என்பது பொதுமறை வழிகாட்டியாகும். அதனை முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக மதிக்கின்றனர். அதனை எவர் அமதித்திருந்தாலும் ஏற்கமுடியாது. 

எனவே இதில் சமரசத்திற்கு இடமேயில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வழக்கை நீடிக்கவிடாமல், சட்டமா அதிபர் மேற்கொண்டு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறும், ஞானசாரருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மேலதிக நடவடிக்கைகளுக்காக, நீதிமன்றம் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

16 comments:

  1. Would have been better to go for peaceful resolution under STRINGENT CONDITIONs not to repeat the same in future.

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுக்கு இம்மை மறுமை இரண்டிலும் ரஹ்மத் செய்வானாக

    ReplyDelete
  3. சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் அவரிடம் முஸ்லிம் தலைமைகளுடன் என்ன பேச்சு வார்தையில் ஈடுபட்டீரகள் அதன் பிரதிபலன் என்னவென்று கேட்டதற்கு அதைமுஸ்லிம் தரபினரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும் என்று சொன்னார் இதை படிப்பினையில் எடுக்கவும் இப்பேச்சுவார்தையை தன்னால் சகித்துகொள்ள முடியாமல் பலவந்தப்பட்டுள்ளார் என்று யோசிக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  4. என்றும் அல்லாஹ் உங்களுக்கு துனை புரிவான்.., உறுதியாக இருங்கள்..., முனாபிக்களை அடையாளம் காண்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு சந்தர்ப்பம்

    ReplyDelete
  5. அல்லாஹ் முனாபிக்களை அடையாளம் காண்பிப்பதற்கு ஏற்படுத்திய ஒரு ஏற்பாடு.., அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக !

    ReplyDelete
  6. Dear Brother Siraz(lawer)
    assalamu alikum. may allah bless you with peace,more healthy,thaughtful,knowledge and long life.
    your stance on this matter is required.but we muslims follow a great relegion of Islam which has base and promotes peace and forgiving.
    we are generation of prophet mohamed who guided us with many practical situation in his more worse than the subject on this particular news item.if the concern party is willing and in writing giving, no more begotry statements and activities done against islam, we should forgive them as guided by beloved prophet.
    thank you
    yasin

    ReplyDelete
  7. சூடு சுரனை அற்ற சில நபர்கள் இதனை கண்டிப்பாக சமரசம் செய்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள்.. இவன் நிச்சயமாக சட்டப்படி தண்டனை பெற வேண்டும்..

    ReplyDelete
  8. Forgiveness can be make huge deference and mind change. Even can impress to revert to islam. Almighty knows everything.

    ReplyDelete
    Replies
    1. He is a snake. Not a normal human. You can say very easily to forgive but the we, who knows the difficulties we went through this cases.

      Delete
  9. இஸ்லாமிய வரலாற்றில் முன்மாதிரிகளுக்கு பஞ்சமே கிடையாது. மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தாராளத்தன்மை, பொறுமை, சகிப்புத்தன்மை, உண்மை, நம்பிக்கை என எல்லாத்துறைகளிலும் இதனை காணலாம்.
    ஆனாலும் தற்கால நடைமுறையில் காணப்படும் வெறுமை இஸ்லாம்பற்றிய தப்பெண்ணங்களை உருவாக்கிவருகின்றது. எனவே இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி எமது முன்மாதிரிகளுக்கு வலுச்சேர்க்கலாம். பலதரப்பு மத்தியஸ்தத்திற்கு மத்தியில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்யலாம்.

    ReplyDelete
  10. We can also go for a peaceful resolution in this matter. There are many examples our beloved Prophet has shown us. Jazakallah hairan brother Shiras.

    ReplyDelete
  11. இந்த மாதரி பத்துப் பேர் எமது சமூகத்திற்கு இருந்தால் ஒருத்தனும் கிட்ட வரமாட்டனுங்கள். Good job sir

    ReplyDelete
  12. Allah may bless to lawyer siras.
    We muslims should appreciate him and give moral support him for his priceless work towards muslims..
    But to take this sort of decision related religion he should consult relevant and dedicated ulamas before it goes to media. Because islam is the religion of peace, patience and forgiveness...so we should follow Allah's and prophet's quidence. ..sometimes we may think that those quidence are humiliating but finaly it will lead to a victory...eg hudaibiya treaty. I suppose mr siraz is doing in correct way....may allah bless him

    ReplyDelete

Powered by Blogger.