Header Ads



குரங்­கு­களின் சேட்­டையே கார­ண­ம் - ஜனாதிபதி

தேங்காய் உற்­பத்தி வீழ்ச்­சிக்கு குரங்­கு­களின் சேட்­டையே கார­ண­மாகும். 10 இலட்சம் குரங்­­கு­க­ளினால் 1 இலட்சம் ஏக்கர் விளை­நி­லங்­களின் தெங்கு உற்­பத்­திக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.மேலும் யானை, பன்­றி­க­ளி­னாலும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. பெளத்த நாடா­னாலும் மிரு­கங்­களை பார்க்­கிலும் மனித குலத்தை பாது­காக்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே, இந்த பிரச்­சி­னைக்கு காத்­தி­ர­மான முடிவு எடுக்க நேரிடும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். தெங்கு விளை­நி­லங்­களில் புதி­தாக வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­த­னாலும் தெங்கு உற்­பத்தி குறைந்­துள்­ளது. இதனை மக்கள் சாதா­ரண பிரச்­சி­னை­யாக கருதக் கூடாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தேசிய உணவு உற்­பத்­தியை மேம்­ப­டுத்தும் முக­மாக ஜனா­தி­பதி தலை­மை யில் பல அமைச்­சுகள் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுக்கும் உணவு உற்­பத்தி வாரம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் அநு­ரா­த­பு­ரத்தில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. விளைச்­சலை பெருக்­கிட ஒரு­மித்து எழுவோம் என்ற தொனி­ப்பொ­ருளின் கீழ் உணவு உற்­பத்தி செயற்­றிட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த திட்­டத்தின் பிர­தான நிகழ்வு நேற்று அநு­ரா­த­புரம், கெகி­ராவ பிர­தே­சத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,

இதனை அனை­வரும் இல­கு­வாக கருதக் கூடாது. அத்­துடன் தெங்கு உற்­பத்­திக்கு மிரு­கங்­களின் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. இதன்­படி குரங்கு, பன்றி,யானை­களின் தாக்­கமும் அதி­க­ளவில் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இலங்கையில் 10 இலட்சம் வரை­யான குரங்­குகள் உள்­ளன. இதில் ஒரு இலட்சம் ஏக்கர் வரை­யான தெங்கு உற்­பத்­திக்கு குரங்­குகள் வேட்டு வைக்­ கின்­றன. இது சாதா­ரண விட­ய­மல்ல. அது­மாத்­தி­ர­மன்றி மயில்­க­ளி­னாலும் பாதிப்­புகள் ஏற்­ப­டு­கின்­றன. கொழும்­பிலும் குரங்­கு­களின் எண்­ணிக்கை அதி­க­மாகும். 

எனினும் இதனை கட்­டுப்­ப­டுத்த முனைந் தால் பல சிக்கல்கள் ஏற்­படும். ஏனெனில் நாம் பெளத்­தர்­க­ள். பெளத்த தர்மத்தின் பிரகாரமே மிருகங்கள் விடயத்தில் முடிவுகளும் எடுக்க வேண்டியுள்ளது. மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்றாலும் அதனை பார்க்கிலும் மனிதனை பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும். ஆகவே, இந்த விட யத்தில் காத்திரமான தீர்மா னங்கள் எடுக்க நேரிடும் என்றார்.

6 comments:

  1. En baudda darmattinpadi muslimkalvidayattilum mudivedukkamalirukkireerkal awarkal manitarkalalliya

    ReplyDelete
  2. muslimkalukku aniyayam seiyum miruka manitharkalukkethiraka nadawadikkai edunkalen

    ReplyDelete
  3. Limited control is needed. By killing some of them

    ReplyDelete
  4. முதலில் சக இன மனிதனையும் மனிதனாக மனித நேயத்தோடு பார்த்தால் எல்லாப் பிரச்சினையும் தீரும் நாட்டுக்கு சிறுபான்மையினரின் சாபக்கேடு பிடித்து விட்டது மழை இல்லை விழைச்சல் இல்லை வருமானம் இல்லை நோயும் செலவும் அதிகரீக்கிறது,இது இறைவன் தண்டனை

    ReplyDelete
  5. What a joke...indirectly saying that coconut price hikes reasons are monkeys...

    ReplyDelete

Powered by Blogger.