Header Ads



தாஜ்மஹால், இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை - பா.ஜ.க.


தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை  என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி இருப்பது கடும் சர்ச்சையை உணடாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரே உலக அதிசயமான தாஜ் மஹாலை, சமீபத்தில் மாநில அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டது. அந்த சம்பவம் உண்டாக்கிய சர்ச்சை அடங்கும் முன்னர், தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை  என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி இருப்பது கடும் சர்ச்சையை உணடாகியுள்ளது. அத்துடன் அவர் வரலாற்றினையும் தவறாக கூறி இருப்பது மேலும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. 

அம்மாநிலத்தின் சர்தானா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் சங்கீத் சோம். இவர் சமீபத்தில் மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விடியோ தற்பொழுது இணைய தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த விடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

மாநில அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ் மஹாலை நீக்கி மாநில அரசு உத்தரவிட்டது பற்றி பெரும்பாலானோர் வருத்தம் தெரிவிக்கின்றனர். எந்த வரலாற்றினை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்? யாருடைய வரலாறு இது?

தாஜ் மஹாலை கட்டியவர் தன்னுடைய தந்தையை சிறையில் அடைத்தவர். ஹிந்துக்களை அவர் இந்தியாவிலிருந்து ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க நினைத்தவர். இத்தகையவர்கள் எல்லாம் நமது வரலாற்றின் ஒரு பகுதியாவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மொத்தத்தில் தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை.

வரலாற்றினை நாம் மாற்றி எழுதுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த விடியோவில் பேசியுள்ளார். ஆனால் அவர் கூறியுள்ளது போல தாஜ் மஹாலை கட்டிய ஷாஜஹான் தனது தநதையை சிறையில் அடைக்கவில்லை என்பதும், அவரது மகனான அவுரங்கசீப்தான் தன்னுடைய தந்தையான ஷாஜஹானை சிறையில் அடைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்திய காவிகள் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இஸ்லாத்தையும் அதன் வரலாற்றையும் அழிக்க நினைத்தாலும் முடியாது. யுகமுடிவு நாளைவரும் அல்லது இன்ன தினத்தில் நடக்கும் என காவிப் போலிச்சாமிகளும் ஜோதிடர்களும் குறிப்பிடுவதுமோன்று ஒன்றும் நடைபெறாது. மாறாக இஸ்லாம் சொல்வது போன்றே அனைத்தும் நடந்து முடியும்.
    இதுவெல்லாம் வேத்ததைப்படிக்காத இதிகாச காவிகளுக்கு எங்கே புரியும் ? குஷ்புக்கு கோயில் கட்டிய மடையர் கூட்டத்திற்கு தாஜமஹாலில் காவிச்சிலையொன்றை வைக்க நெடுநாள் ஆசை. மடையர் கூட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.