October 25, 2017

வட்ஸ் அப் குழுக்களில், குடிமூழ்கும் சமூகம்

தொழில்­நுட்­பத்­தி­னதும் சமூக ஊட­கங்­க­ளி­னதும் அப­ரி­மி­த­மான வளர்ச்­சி­யா­னது எவ­ராலும் எதிர்­பார்க்­கவோ எதிர்­வு­கூ­றவோ முடி­யா­த­ளவு அசுர வேகத்தில் நடை பயின்று கொண்­டி­ருக்­கின்­றது. சமூக ஊட­கங்கள் மூல­மா­கவோ அல்­லது எந்­த­வொரு வகை­யிலோ தொடர்­பாடல் ஒன்றை மேற்­கொள்­வதில் இஸ்லாம் போதிய வழி­காட்­டல்­களை வழங்­கி­யுள்­ளது.

தொடர்­பாடல் ஒன்றின் நோக்கம், அதன் உள்­ள­டக்கம், அணு­கு­மு­றையில் பின்­பற்ற வேண்­டிய வரை­மு­றைகள் என்­பது பற்றி இஸ்லாம் தெள்ளத் தெளி­வாக விளக்­கு­கின்­றது.

முற்­போக்­கான தொழில்­நுட்ப உலகில் சமூக ஊட­கங்­களின் வாயி­லாக கருத்துப் பகிர்­வொன்றை மேற்­கொள்ளும் போது ஏற்­படும் தவ­றான அல்­லது உண்­மைக்குப் புறம்­பான இடைத் தொடர்­பா­டல்கள் ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் அதிகம். சமூக ஊட­கங்கள் இன்­றி­ய­மை­யா­த­தாக மாறி­யுள்ள இக்­கா­ல­கட்­டத்தில் அவற்றின் பாவ­னையை நெறிப்­ப­டுத்தி அதன் மூலம் உச்ச பயனை பெற்றுக் கொள்ளும் வழி­வ­கை­களை அறிந்து வைத்­தி­ருக்க வேண்டும்.

தவ­றான இடைத் தொடர்­பாடல்
ஆண், பெண் கலப்பு கொண்ட குழும கலந்­து­ரை­யா­டல்­களில் அதி­க­ள­வான தவ­றான இடைத் தொடர்­பா­டல்கள் அல்­லது தவ­றான புரிந்­து­ணர்­வுகள் நில­வு­வ­தற்கு அதிக வாய்ப்­புக்கள் உண்டு. ஆண், பெண் பாலின மற்றும் சுபாவ வேறு­பா­டு­களின் அடிப்­ப­டையில் புரிந்­து­ணர்வு மாற்­றங்கள் மேலெ­ழு­வது இயற்­கை­யாகும். 

அடிப்­ப­டை­வா­தி­க­ளாக இருக்கும் சில முஸ்­லிம்கள் வட்ஸ்அப், பேஸ்புக் பாவ­னை­யா­னது இஸ்­லா­மிய நெறி­மு­றைக்கு அப்­பாற்­பட்­டது என விவா­திக்கக் கூடும். இக்­க­ருத்தை முற்று முழு­தாக அங்­கீ­க­ரித்துவிட முடி­யாத போதும் நெறிப்­ப­டுத்­தப்­ப­டாத பாவ­னை­யா­னது இஸ்­லா­மிய ஒழுக்க விழு­மி­யங்­களை சிதைத்துவிட வல்­லது. 

குழும அரட்­டைகள் என்­பன கேளிக்கை மற்றும் வழக்­க­மான உரை­யா­ட­லுக்கே உகந்­தது. ஆனால், இணைய போரா­ளி­களோ அவற்றை பாரிய நோக்­கங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்த முனை­வது சாத்­தி­ய­மற்­றதாகும்.

தேநீர் கடை­யொன்றில் மக்கள் சத்­த­மாக உரை­யாடிக் கொண்­டி­ருக்க, காதைக் கிழிக்கும் இரைச்சலுக்கு மத்­தியில் ஒரு குழு தனது கலந்துரையாடல் ஒன்றை அங்கே நடாத்த திட்­ட­மி­டு­வ­தாக கற்­பனை செய்து கொள்­ளுங்கள். குழு எதிர்­பார்க்கும் அடை­வுகள் அங்கே நிறை­வேற்­றப்­ப­டுமா? இவ்­வா­றான இடங்­களில் தீர்க்­க­மான கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற முடி­யுமா? ஒரு போதும் முடி­யாது. 

குழும அரட்­டைகள் நேரத்தை சேமிப்­ப­தாக கரு­து­கின்றோம். ஆனால், யதார்த்­தத்தில் நேர­டி­யாக சந்­தித்து உரை­யா­டு­வதே பல வகையில் நன்மை பயப்­ப­தாக அமை­கின்­றது. கலந்­து­ரை­யாடல் ஒன்றின் போது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் தனிப்­பட்ட அவ­தானம், பங்­க­ளிப்பு. ஈடு­பாடு என­பன குழும அரட்­டையில் இருக்க மாட்­டாது. மாறாக நேர­டி­யாக குழும உறுப்­பி­னர்­களை பொது இடத்தில் ஒன்றுகூட்டி உரை­யா­டும்­போது கலந்­து­ரை­யாடல் வீரியம் மிக்­க­தா­கவும் பய­ன­ளிப்­ப­தா­கவும் அமை­கின்­றது. தீர்­மானம் எடுக்கும் செயன்­மு­றையில் இதுவே முக்­கி­ய­மா­னது. 

வட்ஸ் அப் குழு­மங்கள் அறி­விப்­புக்­கள், அறி­வு­றுத்­தல்­களை செய்ய மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது சிறந்­தது. காத்­தி­ர­மான முடி­வு­களை எடுக்­கப்­பட வேண்­டிய தீர்­மா­ன­மிக்க கலந்­து­ரை­யா­டல்­களை நேரில் வைத்துக் கொள்­வது பொருத்தம்.

“முஃமின்­களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்­க­ளிடம் ஒரு செய்­தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசா­ரித்துக் கொள்­ளுங்கள்; (இல்­லையேல்) அறி­யா­மை­யினால் (குற்றமற்ற) ஒரு சமூ­கத்­தா­ருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்­தவை பற்றி நீங்­களே கைசேதப்படு­ப­வர்­க­ளாக (கவ­லைப்­ப­டு­ப­வர்­க­ளாக) ஆவீர்கள்.” (49:6)

நேர விரயம் 
அல்­ஹஸன் அல்­பஸ்ரி அறி­விக்­கி­றார்கள்: “நீங்கள் பணத்தை செலவு செய்­வதில் எவ்­வ­ளவு கவ­ன­மாக இருப்­பீர்­களோ அதை விட கவ­ன­மாக தமது காலத்தை செலவு செய்­வதில் உன்­னிப்­பாக இருக்கும் ஒரு கூட்­டத்­தாரை (ஸஹா­பாக்கள்) நான் சந்­தித்தேன்.”
நேர முகா­மைத்­துவம் என்­பது மற்­ற­வ­ரையும் தொற்றிக் கொள்ளும் நன்மை விளை­விக்கும் சிறந்த பண்­பாகும். நேரத்தை கவ­ன­மாக திட்­ட­மிட்டு செல­விடக் கூடிய நபர்­க­ளுடன் நாம் இருப்­போ­மானால் அப்­ப­ழக்கம் எம்­மையும் தொற்றிக் கொள்ளும். அதே­வேளை நேர விர­யத்தை பொருட்­பா­டுத்­தாதோர் மத்­தியில் நாம் வாழ்ந்தால் நாமும் அதன்­போக்­கிலே இழுத்துச் செல்­லப்­ப­டு­வோம்.

இன்­றைய கால­கட்­டத்தில் சமூக ஊடக குழும அரட்­டை­க­ளா­னது வகுப்­ப­றைகள், அலு­வ­லகம், பள்­ளி­வாசல் என்­ப­தையும் தாண்டி படுக்­கை­யறை வரை நீடிக்­கி­றது. செய்ய வேண்­டிய பணி­யி­லி­ருந்து எம் கவ­னத்தை சித­ற­டிக்கச் செய்யும் கவனக் கலைப்­பா­னாக இக்­கு­ழும அரட்­டைகள் விளங்­கு­கின்­றன. முழுக்­க­வ­னத்­துடன் வேலை­யொன்றில் நம்மை ஈடு­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் சமயம் குழும அரட்டை செய்­தி­யொன்றை வாசித்து, பதி­ல­ளித்து வீணான பொழுதை போக்கி விட்டு திரும்­பவும் நாம் செய்து கொண்­டி­ருந்த வேலையில் நம்மை ஈடு­ப­டுத்தும் போது முன்னர் இருந்த முழுக்­க­வனம் இராது. முழுக்­க­வ­னத்தை மீண்டும் எட்ட சில நிமி­டங்கள் செல­வா­கின்­றன. 

இமாம் ஹஸன் அல்­பன்னா கூறி­ய­தா­வது: நேரத்தை செல­வி­டு­வதில் உன்­னிப்­பாக இருங்கள். மற்­ற­வர்கள் தமது நேரத்தை அவ­தா­ன­மாக, பிர­யோ­ச­ன­மாக செலவு செய்ய உத­வி­யா­கவும் இருங்கள். பொறுப்­புக்கள் என்­பது காலத்தின் பாற்­பட்­டது.”

சமூக ஊட­கங்­களில் பிர­யோ­ச­ன­மற்ற வெற்று அரட்­டை­களை ஆரம்­பிக்க எத்­த­னிக்கும் முன்னர் பின்­வரும் நபி­மொ­ழியை உங்கள் எண்­ணத்தில் உலாவ விடுங்கள்:

“அல்­லாஹ்­வையும் இறு­தி­நா­ளையும் நம்­பு­ப­வர்கள் பேசினால் நல்­லதைப் பேசட்டும் அல்­லது மெள­ன­மாக இருக்­கட்டும்.”

முக்­கி­யத்­து­வத்தின் வீரியத்தை  குறைக்கும் குழும அரட்­டைகள்.

சிறிய விட­யங்­களைப் பார­தூ­ர­மாக்கி விடு­வதும் குழும அரட்­டை­களின் பாரிய பாதக விளை­வாகும். சமூக ஊட­கங்கள் பல­போது வெற்றுக் கூச்­சல்­க­ளா­கவும் பய­னற்ற அரட்­டை­களின் அரங்­க­மா­கவும் திகழ்­வதைக் காணக் கூடி­ய­தாக உள்­ளது. யாருக்கும் எவ­ருக்கும் எதையும் பகிரக் கூடிய, எவ்­வாறும் கருத்துக் கூறக் கூடிய சுதந்­தி­ரத்தை சமூக ஊட­கங்கள் வழங்­கி­யுள்­ளன. குழும அரட்­டைகள் அதனை இன்­னொரு பரி­மா­ணத்­திற்கு இட்டுச் செல்­கின்­றன. அவ­தூறுப் பேச்­சுக்­களும் அசிங்­கங்­களும் அரங்­கேறும் தள­மாக குழும அரட்­டைகள் மாறி வரு­கின்­றன. காத்­தி­ர­மான பணியில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்கும் போது சிணுங்கும் குழும அரட்டை அழைப்பு வெற்றுப் பேச்­சுக்­கான அழைப்­பாக, கவனச் சித­ற­லாக மாறு­கி­றது. தடம் மாறு­வ­தற்­கான தளங்­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்­றன. 

அல்­ அஹ்னாப் பின் கைஸ் என்­ப­வ­ருக்கு உமர் பின் கத்தாப் வழங்கும் ஆழ­மான கருத்­துக்கள் கொண்ட பின்­வரும் அறி­வு­ரை­யா­னது  அத்­தனை நண்பர்கள் இணைய போராளிகளையும் சென்று சேர வேண்டியது:
* ஒருவனிடத்தில் பேச்சு அதிகரித்தால், அவனது தவறுகளும் அதிகரிக்கும்
* ஒருவனிடத்தில் தவறுகள் அதிகரித்தால் அடக்கம் குன்றிப் போகும்
* ஒருவனிடத்தில் அடக்கம் குன்றிப் போகும்போது அவனது இறையச்சமும் குன்றிப் போகும்
* எப்போது ஒருவனிடத்தில் உள்ளச்சம் குன்றிப் போகிறதோ அவனது உள்ளம் இறந்து போகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தொடர்பாடல் தளங்களின் பரிமாணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவை எந்தளவுக்கு எமது இறையச்சம், அடக்கம், ஆன்மிக வாழ்வை பாதிக்கின்றன என்பது தொடர்பில் நாம் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

Hassan Iqbal

0 கருத்துரைகள்:

Post a Comment