Header Ads



“இந்தோனேஷியா முஸ்லிம் நாடு, அவர்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை” - வாய்விட்டு சிரித்த புட்டின்


இந்தோனேஷியாவுக்கு பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்ய தனது விவசாயத் துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனையை கேட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாய்விட்டு சிரித்தார்.

விவசாயத் துறை கூட்டம் ஒன்றில் பங்கேற்ற புட்டினிடம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கவே, உலகின் அதிக முஸ்லிம்கள் வாழும் இந்தோனேஷியாவுக்கு பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்ய விவசாயத் துறை அமைச்சர் அலக்சாண்டர் டசெவ் இந்த ஆலோசனையை வழங்கினார்.

“(ஜெர்மனி) அவர்களின் அரைப்பங்கு பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த நாடு ஆண்டுக்கு ஐந்தரை மில்லியன் தொன் பன்றி இறைச்சியை உற்பத்தி செய்கிறது. அதில் கிட்டத்தட்ட மூன்று மில்லியனை சீனா தொடக்கம் இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா என்று ஏற்றுமதி செய்கிறது” என்று டசெவ் குறிப்பிட்டார்.

அப்போது சிரித்தபடி பதலளித்த புடின், “இந்தோனேஷியா ஒரு முஸ்லிம் நாடு. அவர்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை” என்றார்.

எனினும், “அவர்கள் சாப்பிடுகிறார்கள்” என்று டசெவ் கூறியபோது, “இல்லை, அவர்கள் சாப்பிடுவதில்லை” என்று பதில் கூறிய புடின் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை மறைத்துக் கொண்டார். தான் தென் கொரியாவுக்கு பதில் இந்தோனேஷியாவின் பெயரை கூறியதை அமைச்சர் பின்னர் விளக்கினார்.

2 comments:

  1. புட்டினுடைய பரந்த அறிவை பாராட்டவேண்டும் இப்படியெல்லாம் சிந்திக்க புலி அந்தோனிக்கு எல்லாம் ஏன் தெரியாமல் போச்சு.

    ReplyDelete
    Replies
    1. @Lafir, நீங்கள் சரியான காமேடி தான்.

      கறுப்பாடு பற்றி நேற்று ஏதோ comments போட்டிருந்தீர்கள், ஒன்றும் புரிய வில்லை.

      Delete

Powered by Blogger.