Header Ads



ஞானசார மன்னிப்புக் கேட்டால், சமரசம் பற்றி சிந்திக்கலாம் - றிசாத்

500 மில்லியன் ரூபா  நஷ்டஈடு கோரி ஞானசார தேரர் மீது நான் தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (17/ 10/ 2017)  விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட  ஆவணங்கள் மற்றும் சீ.டி ஆகியவற்றை ஏற்கனவே நாம்  நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தோம்.      சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து விட்டு நான் அன்று நீதிமன்றத்துக்கு சென்ற போது, அந்த வழக்கு தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. எங்களுக்கு அழைப்பாணை அனுப்பாமல், மனுதாரர் ஆகிய நான் நீதிமன்றத்துக்கு வரவில்லை எனக் காரணம் காட்டி வழக்கை மற்றுமொரு நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தார்கள். அப்போது எமக்கு அறிவிக்கப்படாமல் அந்த வழக்கு நிலுவையில் (Pending) போடப்பட்டிருந்தது.

தற்போது வழக்கு வந்த நீதிமன்றத்துக்கு நான் சென்ற வேளை ஆவணங்கள் தொலைந்து விட்டன என்று கூறிய போது, எனது சட்டத்தரணிகள் அங்கிருந்த அதிகாரிகளிடம், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்வோம் எனக் கூறிய பின்பே, ஆவணங்களை தேடி எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கண்டியில் நேற்று இடம்பெற்ற அமர்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாட்,

அமைச்சரான எனக்கே இந்த நிலை என்றால் விபரமறியாத பாமர மக்களின் நிலை என்னவாகும்? எனக் குறித்த சம்பவத்தைக் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாட், 

“ஞானசார தேரர் விடயத்தில் தற்போது சமரசத்துக்கு போகுமாறு என்னிடம் அங்கிருந்த அவரது சகாக்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனினும், வில்பத்துவில் வேற்றுமொழி  பேசும் மக்களை குடியேற்றினேன், வில்பத்துக் காட்டை அழித்தேன் என்ற விடயங்களை தான் கூறியது தவறென மன்னிப்புக் கேட்டால் இந்த விடயத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம் என நான் உறுதியாகக் கூறியிருக்கிறேன்” என குறிப்பிட்டார்.     
         

No comments

Powered by Blogger.