Header Ads



ஈரானுக்கு எதிராக, களம் இறங்குகிறார் டிரம்ப்

ஈரானின் புரட்சிக் காவல் படை எதிரான அறிவிப்புகள் உள்பட அந்த நாட்டுக்கு எதிராகப் புதிய நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று அதிபர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதில் குறிப்பிட்டிருப்பது: ஈரான் தொடர்பான புதிய கொள்கையை அதிபர் டிரம்ப் அறிவிக்கவிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றம், நட்பு நாடுகள் ஆகியவற்றின் யோசனைகளை அறிந்து புதிய ஈரான் கொள்கையை அதிபர் டிரம்ப் வகுத்துள்ளார். அமெரிக்க நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாகப் புதிய கொள்கை அமையும். அந்தக் கொள்கை மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க நட்பு நாடுகளின் நலனைக் காப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும். பிராந்திய அமைதியைக் குலைக்கும் ஈரானின் சதி வேலைகள் முறியடிக்கப்பட வேண்டும். ஈரானின் புரட்சிக் காவல் படையின் சதி வேலைகளுக்கு அந்நாடு நிதி ஒதுக்குவது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும். ஈரான் அணு ஆயுதத் திறன் பெறுவதற்கான அனைத்து வழிகளையும் முடக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை ஈரான் குவித்துள்ளது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக வல்லரசு நாடுகளுடன் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி, அந்நாட்டின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை அடுத்த 15 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் சர்வதேச அணு சக்தி அமைப்பு ஆய்வாளர்களை ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளாமல் அந்த நாடு தடுத்து வருகிறது. இவை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் வெளியிடுவார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவற்றுக்கு ஈரானின் புரட்சிக் காவல் படை உதவி அளித்து வருகிறது என்று அமெரிக்கா நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகிறது. யேமன், சிரியாவில் அமெரிக்க நலனுக்கு எதிராக ஈரான் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்புகளைத் தவிர, ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த அறிவிப்பையும் டிரம்ப் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நாட்டின் புரட்சிக் காவல் படையை பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா அறிவிக்கும் என்று ஒருசிலர் கூறி வந்தாலும் அதனை அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன.

4 comments:

  1. வெறிபிடித்தநாயை அடித்துக்கொல்வதுபோல் ட்ரம்பின் நடவடிக்கைக்கு பதில் கிடைக்கடிடும்...

    ReplyDelete
  2. பாவம் மாப்பு. வடகொரியாவிடம் வாயை கொடுத்து ..... அதை புண்ணாக்கிக்கொள்ள..
    அந்த தலைகுனிவை திசை திருப்ப இப்பொழுது இந்த ஈரான் கதை.
    ரஷ்யப்படை சிரியாவில் நுழைந்து அமெரிக்காவின் வளர்ப்பு நாட்களான ISIS துவம்சம்செய்ய தொடங்கியபோது ரஷ்யாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சியோனிச மீடியாக்கள் பல குற்றச்சாட்டுக்களை வைத்தன...
    இப்பொழுது ISIS ஊர்பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரக்கா நகரத்தை விட்டும் வெளியேறுகிறார்களாம்.
    இவ்வளவு காலமும் tribal elders இன் பேச்சைக்கேற்காத ISIS ரஷ்யாவின் அடி தாங்கமுடியாமல் அமெரிக்கா அதன் வளர்ப்பு நாய்களுக்கு இப்படி ஒரு நாடகமாடச்சொல்லியிருக்கிறது.
    ஒரு interview இல் ரஷ்ய ஜனாதிபதி புடின் இப்படிக்கூறினார் " we all know who created ISIS and who is backing up. We all know what is their interest in that region"
    This sums up.

    ReplyDelete
    Replies
    1. @VoicePakistan, சும்மா கதை விடாதீர்கள். அமேரிக்கா வுக்கும் ISIS க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. என்ன ஆதாரம் சொல்லுங்கள்?

      ISIS என்பது அல்-கைடோ, முஹாகிடீன், ஹமாஸ் போன்ற என்னொரு முஸ்லிம் அமைப்பு.

      Delete
    2. Ajan..nee muzalil tamil terroristukku ullavatrai patri parthu nada.

      Delete

Powered by Blogger.