Header Ads



மகனைப் பார்த்து, கண் கலங்கினார் தந்தை -

சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனை பார்வையிடச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண் கலங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தையாக மகனின் நிலைகண்டு தடுமாறிய மஹிந்த பெரும் கவலை அடைந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்காலையில் சிறை வைக்கப்பட்டுள்ள நாமலை, மஹிந்த ராஜபக்சவுடன் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச, யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று -15- சென்று பார்வையிட்டனர்.

நாமலை பார்வையிட்ட பின்னர் மஹிந்த பெரும் சோகத்துடன் வெளியேறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த மஹிந்த ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

“இந்த நாட்டு சொத்துக்களை விற்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். விற்பனை செய்ய முயற்சிக்கும் துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் மீது நாட்டு மக்களுக்கும் உரிமை உண்டு.

இன்று வடக்கில் சட்டம் இல்லை. வடக்கிற்கு தேவையான வகையிலேயே சட்டம் உள்ளது. இவர்கள் வாக்கு பெற வேண்டும் என்பதற்காக அப்படி ஒன்றை செய்து கொடுத்துவிட்டு பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

சுதந்திரம் என்பது இதுதான். இங்கு சிறைப்படுத்தப்பட்டிருப்பது அப்பாவி மக்கள். முஸ்லிம் பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள், அப்பாவி தாய்மார்கள் இங்கு உள்ளனர். இது ஒரு மிகப்பெரிய குற்றமாகும்” என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நீதிமன்ற உத்தரவை மீறி மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நாமல் ராஜபக்ச உட்பட குழுவினர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.